சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-3
-
கேள்வி. சில மதங்களில் இந்த உலகம் மனிதன் அனுபவிப்பதற்காக படைக்கப்பட்டிருக்கிறது,இந்த மிருகங்கள் மனிதன் சாப்பிடுவதற்காக படைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகின்றனவே.இது உண்மையா?
-
சுவாமிஜி...சில பெற்றோர்கள்,தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஓ தேவனே! சூரியனை எனக்காகப் படைத்தாய் சந்திரனை எனக்காக படைத்தாய் என்று கூறி பிரார்த்திக்குமாறு கூறுகிறார்கள்.இவற்றையெல்லாம் படைத்துத்தருவதை தவிர கடவுளுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
-
இன்னொருவகை முட்டாள்கள் இருக்கிறார்கள்.தாங்கள் கொன்று தின்பதற்காகவே மிருகங்கள் படைக்கப்பட்டிருப்பதாகவும்,தாங்கள் அனுபவிப்பதற்காககத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டிருப்பதாகவும் போதிக்கிறார்கள்.
-
ஒரு புலி இறைவனிடம் பிரார்த்திப்பதாக இருந்தால் எவ்வாறு பிரார்த்திக்கும்? ஓ பகவானே இந்த மனிதர்கள் எங்கள் கைகளில் தானாக வந்து கிடைக்கும் படி ஏற்பாடு செய் என்று பிரார்த்திக்கலாம்.
-
இந்த உலகம் நமக்காக படைக்கப்பட்டிருக்குமானால் நாமும் உலகத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் (அதாவது நமது தேவைக்காக உலகம் படைக்கப்பட்டுள்ளதா அல்லது உலகத்தின் தேவைக்காக நாம் படைக்கப்பட்டுள்ளோமா?ஒன்றை ஏற்றுக்கொண்டால் இன்னொன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்) நமது சுகத்திற்காகத்தான் உலகம் படைக்கப்பட்டிருப்பதாக நினைப்பது நம்மை முன்னேறவிடாமல் தடுக்கிறது.
-
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 1.பக்கம்184
-
விவேகானந்தர் விஜயம்

No comments:
Post a Comment