விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 56
---
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வாழ்ந்த போது, அங்குள்ள மக்கள் சிலர் வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு தான் இந்துக்கள் நாகரீகத்தை பற்றி தெரிந்துகொண்டார்கள் என்று பேசுவதுண்டு, அதற்கு சுவாமிஜி ஒரு முறை இவ்வாறு கூறினார்.
-
வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்தது இந்துக்களை வெல்வதற்காக அல்ல,அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவும் அல்ல, உண்மையில் இந்துக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்காகவே வந்தார்கள். இந்தியாவிற்கு வந்த படைவீரர்கள் நாகரீகம் தெரியாதவர்களாக இருந்தார்கள்.
-
ஒரு நாள் நான் தெருவேரமாக அமர்ந்திருந்தேன். அந்த வழியாக இரண்டு ஆங்கிலேய வீரர்கள் வந்தார்கள்.அவர்களில் ஒருவன் என்னைக்காலால் உதைத்தான், திகைப்படைந்த நான் அவனிடம் காரணம் கேட்டேன். அதற்கு அவன் இந்தியர்களைக்கண்டாலே இவ்வாறே ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது என்றான். நானும் விடவில்லை, ஓ! உங்களைக்கண்டாலும் எங்களுக்கு அவ்வாறு தான் தோன்றுகிறது என்றேன்.
-
இந்த ஆங்கிலேய படைவீரர்கள் எத்தனை இந்தியப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் தெரியுமா? இந்தியன் ஒருவன் ஆங்கிலேயனிடம் தவறாக நடந்துகொண்டால் அவனை உடனே கொன்றுவிடுவார்கள். பாவம் இந்துக்கள் கதறி அழுவார்கள்,அவர்களால் வேறு என்ன தான் செய்ய முடியும். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்துக்களிடம் எவ்வளவு தான் தவறாக நடந்துகொண்டாலும் அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.
-
எங்களுக்கு மட்டும் சற்று போர்குணம் இருக்குமானால்,இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆங்கிலேயர்கள் எங்களை ஆளமுடியுமா? அதனால் தான் இந்தியா முழுவதும் சென்று அனைவரும் இறைச்சி சாப்பிடவேண்டும்,போர் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.
நமது உணவை ஒருவன் தட்டிப்பறிக்கிறான்.அதைக்கண்டு அழுது புலம்புவதா? அல்லது எதிர்த்து போராடி மடிவதா? எது மேலானது?.
-
--
1900, சுவாமிஜி அமெரிக்காவுக்கு இரண்டாம் முறையாக சென்றபோது தன்னிடம் அதிக அளவு ஆன்மீக சக்தி வெளிப்படுவதை உணர்ந்தார்.
-
சுவாமிஜியின் பரபரப்பான வாழ்க்கையும், கூடவே உடல் நோய்களும் ஒரு பக்கம் தொடர்ந்தன. மறுபக்கம், அவரது ஆன்மீக ஆற்றலின் வெளிப்பாடும் உச்சங்களை நோக்கி விரிந்துகொண்டிருந்தன.
-
ஒரு நாள் அவர் அபேதானந்தரிடம், சகோதரா, என் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன. இனி மூன்றோ நான்கோ வருடங்கள் தான் உயிர் வாழ்வேன் என்றார். அதனை இடைமறித்த அபேதானந்தர்,“நீங்கள் அப்படிச்சொல்லக் கூடாது,சுவாமிஜி ! உங்கள் உடல்நிலை நன்றாக தேறிவருகிறது.இன்னும் சில காலம் இங்கே இருந்தால் உங்கள் தெம்பும் ஆற்றலும் பழைய நிலைக்கு வந்துவிடும் அதுமட்டுமின்றி, நாம் இப்போது தான் பணியை ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது“ என்றார்.
-
அமைதியாக ஆனால் அழுத்தமாக பதில் கூறினார் சுவாமிஜி ,
-
”உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடியாது. நான் மிகப்பெரிதாக வளர்ந்து கொண்டே போவதுபோல் உணர்கிறேன். என் ஆன்மா விரிந்து கொண்டே போகிறது, இனியும் இந்த உடம்பால் என்னைத் தாங்கிக்கொள்ள முடியாது என்று சிலவேளைகளில் உணர்கிறேன். இப்போது வெடித்துவிடுவேன். உண்மையாகவே சொல்கிறேன், வெறும் சதையும் ரத்தமும் சேர்ந்த இந்தக் கூட்டினால் என்னை இனியும் அதிக நாள் தாங்கிக்கொள்ள இயலாது.
--
---தொடரும்...
-
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:
Post a Comment