Monday, 19 December 2016

அமெரிக்க மக்களிடம் பேசினார்

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க மக்களிடம் பேசினார்
-
நான் ஒரு துறவி. மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவன் அல்ல.இந்தியாவில் இருக்கும் போது கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக மக்களுக்கு போதித்துக்கொண்டே போவேன். பணத்தை தொட எனக்கு அதிகாரம் இல்லை.எனவே மக்கள் எனக்கு உணவளித்து என்னை காப்பாற்றுவார்கள்.
-
நான் வங்காளத்தில் பிறந்தேன். நானே விரும்பி துறவியானேன், பிரம்மச்சாரியானேன். நான் பிறந்த உடன் என் ஜாதகத்தை என் தந்தை குறித்து வைத்தார். எனது ஜாதகம் பற்றி சிறுவயதில் எனக்கு தெரியாது. எனது தந்தை இறந்த பிறகு, சில ஆண்டுகள் கழிந்தபின் என் தாயின் பெட்டியிலிருந்து எனது ஜாதகத்தை பார்த்தேன். இவன் உலகமெல்லாம் சுற்றித்திரியும் துறவியாக வாழ்வான் என்று அதில் குறிக்கப்பட்டிருந்தது.
-
சுவாமி விவேகானந்தர்


No comments:

Post a Comment