இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-13
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதங்கள் பற்றி பார்ப்போம்-2
-
தொடக்கமும் முடியும் அற்ற வேதங்களின் மூலமே உலகம் முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது.
-
இந்த உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே.எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
-
தோன்றா நிலையில் இருந்த எண்ணம் எந்த சொற்களின் மூலம் வெளிப்பட்டதோ, அந்த சொற்களின் தொகுதியே வேதங்கள்.
-
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால்,புறவுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் வேதங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஏனெனில் ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அதைக்குறிக்கும் சொல் இல்லாமல் இருக்க முடியாது.(சொல்லுக்குப் பின்னால் எண்ணம் உள்ளது) எண்ணம்,அதிலிருந்து சொல்,அதிலிருந்து புறப்பொருள் உருவாகிறது.
-
இந்த சொல் என்பது என்ன? வேதங்களே. வேதத்தின் மொழி என்ன? சமஸ்கிருதம் இல்லை. வேதத்தின் மொழி வேதமொழி. வேதமொழியைவிட பழைய மொழி எதுவும் இல்லை.
-
வேதங்களை எழுதியது யார் ? என்று நீங்கள் கேட்கலாம். வேதங்கள் எழுதப்படவே இல்லை. சொற்களே வேதங்கள். ஒரு சொல்லை நான் பிழையின்றி உச்சரித்தால் அதுவே வேதம்.விரும்பிய பலனை அது உடனே அளிக்கும்.
-
வேதத்தொகுதி என்னென்றும் உள்ளது. உலகம் எல்லாம் அந்தச் சொல்தொகுதியின் வெளிப்பாடே. வெளிப்பட்டு காணப்படுகின்ற சக்தி,ஒரு கல்பம் முடியும்போது சூட்சும நிலையை அடைந்து, சொல்வடிவையும், பின்பு எண்ண வடிவையும் அடைகிறது. அடுத்த கல்பத்தில் மீண்டும் எண்ணங்கள் சொல்லாகி, அதிலிருந்து உலகம் பிறக்கிறது.
-
வேதங்களில் அடங்காதது என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் மனமயக்கமே. அப்படி எதுவும் இருக்க முடியாது.
-
வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. மற்ற மதங்களின் நூல்கள் அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவை,ஆனால் வேதங்கள் மனிதரால் எழுதப்படவில்லை.மனிதரால் உருவாக்கப்ட்டவை எதுவாக இருந்தாலும் அவை வேதங்கள் அல்ல.ஏனென்றால் வேதங்களுக்கு துவக்கமும் இல்லை,முடியும் இல்லை.அவை எல்லையற்ற காலம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
தத்துவரீதியாக இது முற்றிலும் சரியே.
--
தொடரும்....
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்7பக்கம்.83
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment