Sunday, 4 December 2016

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-11

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-11
-
ஆச்சர்யோ வக்தா குசலோஸ்ய லப்தா.....(கட உபநிடதம் 1.2.7)
-
”ஆன்மீகத்தைப்பற்றிப் பேசுபவர் அற்புதமானவராக இருக்க வேண்டும்.கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும்”
-
அறிவை வளர்த்துக்கொள்வதற்கு நாம் நூல்களிலிருந்து உதவி பெறலாம்.ஆனால் ஆன்மீக வளர்ச்சிக்கு,அனேகமாக நூல்களிலிருந்து ஒன்றுமே பெற முடியாது. நூல்களைப்படிக்கும்போது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏதோ உதவி கிடைப்பது போன்றதொரு மனமயக்கம் ஏற்படுகிறது.ஆராய்ந்து பார்த்தால் நம் அறிவுக்கு உதவி கிடைத்ததே தவிர ஆன்மாவுக்கு அல்ல என்பது தெரியவரும்.
-
ஆன்ம வளர்ச்சிக்கான அந்த தூண்டுதல் இன்னோர் ஆன்மாவிலிருந்து தான் வரவேண்டும். எந்த ஆன்மாவிலிருந்து இந்த தூண்டுதல் வருகிறதோ அவரே குரு,
குருவிற்கு அதற்கான சக்தி இருக்க வேண்டும்.ஆற்றலை தம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பாய்ச்சும் சக்தியை அவர் பெற்றிருக்க வேண்டும்.இரண்டாவதாக அந்த சக்தியை பெருபவரும் அதற்கான தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
-
ஒருவனுக்கு ஆன்மீகம் தேவை என்ற நிலைவரும்போது,அதற்கான ஆன்மீக ஆற்றலை அளிப்பவர் வந்தேயாக வேண்டும்.
ஆனால் ஒருவன் தன் மனத்தில் எழும் தற்காலிக உணர்ச்சிப்பெருக்கை உண்மையான ஆன்மீக தாகம் என்று நினைத்துவிட வாய்ப்பு உள்ளது.
-
நாம் நம்மையே ஆராய்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் உண்மையிலேயே இறைவனை தேடுகிறோமா? என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். பலரை பொறுத்தவரை அவர்கள் இன்னும் சீடனாகும் தகுதி பெறவில்லை என்பது புரியும்.
--
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 1.பக்கம் 268
--
---விவேகானந்தர் விஜயம்--- சுவாமி வித்யானந்தர் 97 89 37 41 09

No comments:

Post a Comment