Sunday 4 December 2016

வெடிகுண்டு எறிவேன்

வெடிகுண்டு எறிவேன்
--
1900மார்ச் மாதத்தில் சான்பிரான்சிஸ்கோவில் சுவாமி விவேகானந்தர் அளித்த சொற்பொழிவுகள் மனம்,மனஇயல் சம்மந்தப்பட்டவையாக,ராஜயோகத்துடன் தொடர்புடையவையாக இருந்தன.“முக்திக்கு வழி“ என்ற தலைப்பில் ஒரு நாள் பேசினார்.
-
அந்த சொற்பொழிவு நிறைவுறும் வேளையில்,நாளை நான் மனம்,அதன் ஆற்றல்களும் சாத்தியக்கூறுகளும் என்ற தலைப்பில் பேச உள்ளேன்,வந்து கேளுங்கள்.அதில் சிறப்பான செய்தி ஒன்றை உங்களுக்காகச்சொல்லப்போகிறேன். ஆம், வெடிகுண்டு ஒன்றை வீசப்போகிறேன் என்றார். இதனைக் கூறிவிட்டு முகத்தில் புன்னகை மலர பார்வையாளர்களை ஒருமுறை பார்த்தார். பிறகு கைகளை அசைத்தபடி வாருங்கள்,அது உங்களுக்கு நன்மை செய்யும் என்றார்.
--
மறுநாள் அரங்கம் நிரம்பி வழிந்தது. நிற்கக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம் அலைமோதியது.”சுவாமிஜியும் வெடிகுண்டை எறியவே செய்தார்.அப்படி அவர் எறிந்த வெடிகுண்டு தான் என்ன?
-
தூய்மை,புனிதம்,கற்பு,நல்லொழுக்கம் போன்ற கருத்துக்களை அவர் ஆணித்தனமாக எடுத்துக்கூறியது தான் அந்த வெடிகுண்டு.
-
”அன்று அமெரிக்காவில் வசித்து வந்த இந்து இளைஞன் ஒருவன் என்னைக்காண வந்தான்.அவன் பேச்சுவாக்கில், பிரம்மச்சர்யம் என்பதெல்லாம் பொய்.அது முடியவே முடியாது,அது இயற்கை நியதிக்கே எதிரானது என்று இந்த நாட்டிலுள்ள டாக்டர்கள் கூறுகிறார்கள்” என்றான் “நான் அவனிடம்,”போ,இந்தியாவிற்கு திரும்பிப் போ.உன் முன்னோர்களின் உபதேசத்தைப்படி, அது சாத்தியம் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் போதிப்பது மட்டுமல்ல, வாழ்ந்தும் காட்டிவருகிறார்கள் என்றேன்.
-
இந்த இடத்தில் சுவாமிஜி வார்த்தைகளால் விளக்க முடியாத வெறுப்பை முகத்தில் தேக்கியபடி பார்வையாளர்களை ஒருமுறை பார்த்தார். பிறகு அதிர்வேட்டு போல முழங்கினார்.
-
இந்த நாட்டின் டாக்டர்களே! காம ஆற்றலைக்கட்டுப்படுத்துவது இயற்கை நியதிக்கு முரணானது என்று நீங்கள் கூறுகிறீர்கள். பாவம், என்ன சொல்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை. கற்பு என்பதன் பொருள் உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் மிருகங்கள்!மிருகங்கள்!மிருகங்களின் ஒழுக்க முறையை வாழ்கின்ற நீங்கள் இதற்குமேல் என்ன சொல்ல முடியும்?”
-
தாம் சொல்வதற்கு ஏதிராக எதிர்கருத்துக்கள் இருக்குமடானால் சொல்லலாம் என்று சவால்விடுவதைபோல சுவாமிஜி கூட்டத்தினரை ஒருமுறை பார்த்தார். எங்கும் நிசப்தம்! ஒருவரும் பேசத்துணியவில்லை. அந்த கூட்டத்தில் டாக்டர்கள் பலர் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சுவாமிஜியின் பேச்சு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலர் அதன்பிறகு அவரது சொற்பொழிவுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள்.சிலர் சுவாமிஜி நீங்கள் இவ்வாறு பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுரை கூறினார்கள்.
சுவாமிஜி இதை பொருட்படுத்தவே இல்லை.அது மட்டுமல்ல மேலை நாடுகளில் இந்த கருத்தை தேவைப்படும் போது பேசவே செய்தார்.
-
ஒருமுறை அமெரிக்கர் ஒருவர், தத்துவசொற்பொழிவுகள் வேண்டும் என்றார்.அப்போது சுவாமிஜி, அப்படியா?உங்களுக்கு தத்துவம் வேண்டுமா? அப்படியானால் பீரங்கிக்குண்டுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று கூறினார்.
--
-விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment