சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்த காலத்தில், இந்தியாவில் அவரைப்பற்றி பல அவதூறுகள் பரப்பப்பட்டன.அவற்றுள் ஒன்று சுவாமிஜி வெளிநாட்டு சமையல்காரர்கள் சமைப்பதை உண்கிறார் என்பது.
-
அவரது காலத்தில் உயர்சாதி இந்துக்கள் சாப்பாடு விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருந்தார்கள்.
1.தங்கள் சாதியை சேர்ந்த சமையல்காரர் சமைப்பதையே உண்ண வேண்டும்
2. சாஸ்திரங்கள் அனுமதிக்கும் உணவுகளையே சமைக்க வேண்டும்
3.வெளிநாட்டினர் , பிற மதத்தினர் மற்றம் பிற சாதியினர் தரும் உணவை உண்ணக் கூடாது. அவர்களுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.
4. அதே போல் தங்கள் உண்ணும் உணவை ,அவர்களுக்கு வழங்கவும் கூடாது.
-
அவரது காலத்தில், இந்து மதத்தை பரப்புவர் உயர்சாதியினராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உயர்சாதியினர் அவரை மதபோதகராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
1.சுவாமிஜி உயர்சாதி இல்லை. 2. அவர் அனைத்து சாதி, மதத்தவரோடு சேர்ந்து உண்டார்.3.சாஸ்திரங்கள் அனுமதிக்காத இறைச்சி போன்ற உணவுகளை உட்கொண்டார்.
இதன் காரணமாக அவரது காலத்தில் உயர்சாதி இந்துக்கள் (விதிவிலக்காக சிலர் சுவாமிஜியை ஆதரித்தார்கள்) பொதுவாக சுவாமிஜியை எதிர்த்து வந்தார்கள்.அவர் ஒரு இந்து இல்லை என்றே பத்திரிக்கைகளில் பேட்டியளித்தார்கள். இதன் காரணமாக பல கோவில்களுக்கு செல்வதற்கு சுவாமிஜியை அனுமதிக்கவில்லை.
-
இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள பத்திரிக்கைகளில் வெளியானது. இந்தியாவில் உள்ள இந்துக்கள் சுவாமிஜியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சிலர் அமெரிக்காவில் பிரச்சாரம் செய்தார்கள்.
-
இரண்டாவது முறையாக சுவாமிஜி அமெரிக்கா செல்லும் போது பத்திரிக்கை நிரூபர் இதை குறித்து கேள்வி ஒன்று கேட்டார்
-
நிரூபர்..வெளிநாட்டினரோ, இந்து அல்லாதவரோ சமையல் செய்த உணவை நீங்கள் உண்ணக்கூடாது என்பது உண்மையா?
-
சுவாமிஜி..இந்தியாவில் சமையல்காரன் வேலைக்காரனாக கருதப்படுவதில்லை. அவன் அதே ஜாதி அல்லது உயர்ஜாதிக்காரனாக இருக்க வேண்டும். ஒருவன் தொடுகின்ற உணவு அவனது ஆளுமையின் பதிவை பெறுகிறது. மனிதன் தன்னை வெளிப்படுத்த உடம்பு முக்கியம்.அந்த உடம்பு உணவால் உருவாக்கப்படுகிறது. எனவே உண்ணும் உணவு விசயத்தில் கவனம் தேவை. உணவுக்காக நாங்கள் உயிரினங்களைக்கொல்வதில்லை. அத்தகையை உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை தரலாம் ஆனால் மனத்திற்கு கேடுவிளைவிக்கிறது. ஆன்மீக வாழ்க்கைக்கு அது உதவாது.எனவே ஆன்மீக வாழ்வைக்கருதி நாங்கள் உணவிற்காக உயிர்களைக்கொல்வதில்லை, அவ்வாறு கொன்றால் கொல்பவனுக்கும், அதை உண்பவனுக்கும் பாவம் வருகிறது.“ என்றார்
-
நிரூபர்..அப்பாடா!!!
-
உணவில் இத்தனை விசயங்கள் இருப்பதை வெளிநாட்டினர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.இதைக்கேட்ட நிரூபர் மிகவும் ஆச்சர்யப்பட்டார்.
அவ்வாறு கொல்லப்படும் ஆடு,மாடு,கோழிகள் இறந்த பிறகு ஆவியாக அலையுமோ என்று தமக்குள் நினைத்துக்கொண்டார் அந்த நிரூபர்.
-
சுவாமிஜி தொடர்ந்து பேசினார். இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே. மிகச்சாதாரணமான உயிரினம் முதல் மிக உயர்ந்த யோகிவரை அவைரும் ஒன்றே. நீங்களும் நானும் எல்லோரும் ஒன்றே...
---
-
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:
Post a Comment