Monday, 19 December 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 64

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 64
---
சுவாமிஜி தனது துறவிசீடர்கள் அனைவரையும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்தியாவில் பல்வேறு இடங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்த அனைவருக்கும் கடிதம் எழுதப்பட்டது.
சிலர் வந்தனர்,பலர் வேலை காரணமாக வரவில்லை. இது தங்களுக்கான கடைசிவாய்ப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
-
நாட்கள் ஆக ஆக மெல்ல மெல்ல மடத்தின் வேலைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். சீடர்களுக்கு பயிற்சியளிப்பது போன்ற பணிகள் கூட குறைந்துபோனது. மெல்ல மெல்ல அவர் தியானத்தில் மூழ்க ஆரம்பித்தார். அவருடன் இருந்த சகோதர துறவிகள் இதை கவனிக்க தவறவில்லை.
-
”என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என்று சகோதரதுறவிகளிடம் கூறினார்”
-
”மரணம் என் முன்னால் நிற்கிறது, நான் வேண்டிய அளவு வேலை செய்துவிட்டேன். நான் கொடுத்துள்ளதை முதலில் உலகம் புரிந்துகொள்ளட்டும், அதை புரிந்துகொள்வதற்கே மிக நீண்ட காலம் ஆகும்.முடிவே இல்லாமல் விளையாடிக்கொண்டிருப்பதா? போதும் இந்த விளையாட்டு” என்று சுவாமிஜி கூறினார்.
-
தியானம் மட்டுமே அவரது முழுவேலையாகிவிட்டது. அவரது உதடுகள் எப்போதும் இறை நாமத்தை உச்சரித்தவாறு இருந்தது.
-
நான் யார் என்பதை நரேன் உணர்ந்துவிட்டால்,பிறகு நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்துவிடுவான் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு கூறியிருந்தார்.
-
சுவாமிஜி, நீங்கள் யார் என்று உணர்ந்துவிட்டீர்களா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம் என்று பதிலளித்தார். அப்போது அங்கே ஓர் ஆழ்ந்த மௌனம்
நிலவியது.
-
சுவாமிஜி நம்மையெல்லாம் விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை உணர ஆரம்பித்தார்கள்.
பலரால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
-
1902 ஜுன் இறுதியில் ஒருநாள் சுவாமிஜி சுத்தானந்தரை அழைத்து ஒரு பஞ்சாங்கம் கொண்டுவரச்சொன்னார். ஏதோ ஒரு நாளை குறிப்பதற்காக பஞ்சாங்கத்தை கேட்கிறார் என்று சுத்தானந்தர் நினைத்தார்.ஆனால் தனது கடைசி நாளை குறிக்கவே அதை கேட்டார் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.
--
--தொடரும்---
-
---விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment