சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-16
---
கேள்வி.. உலகத்தில் தீமை உள்ளதா? தீமையை ஏன் பார்க்கிறோம்? மகான்களின் கண்களுக்கும் குழந்தையின் கண்களுக்கும் தீமை தெரியாது என்பது உண்மையா?
--
சுவாமிஜி...தீமையை நாம் ஏன் காண்கிறோம்?
-
இருட்டில் ஓர் அடிமரம் நிற்கிறது. அந்த வழியே வந்த ஒரு திருடன் அதைப் பார்த்துவிட்டு. அது ஒரு போலீஸ்காரன் என்று நினைத்தான். காதலிக்காகக் காத்துக்கொண்டிருந்த ஓர் இளைஞன். அந்த மரத்தைத் தன் காதலி என்று நினைத்தான். பேய்க் கதைகளைக் கேட்டிருந்த ஒரு குழந்தை, அதே மரத்தைப் பேய் என்று நினைத்துப் பயத்தில் அலற ஆரம்பித்தது, எல்லோரும் பார்த்தது என்னவோ அடிமரத்தைத்தான். அதுபோலவே நம் எண்ணங்களின் படியே உலகம் நமக்குத் தோன்றுகிறது.
-
ஓர் அறையில் ஒரு குழந்தையும் பொற்காசுகள் நிறைந்த ஒரு பையும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திருடன் ஒருவன் அங்கே வந்து பொற்காசுகளைத் திருடிச் செல்கிறான். பொற்காசுகள் திருட்டுப் போனது குழந்தைக்குத் தெரியுமா?
-
நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதையே வெளியிலும் காண்கிறோம். குழந்தையின் உள்ளே திருடன் என்ற எண்ணமே கிடையாது. ஆகவே அது வெளியிலும் திருடனைக் காணவில்லை. எல்லா அறிவும் அதே போன்றுதான். உலகின் தீமைகளையும் பாவங்களையும்பற்றிப் பேசாதீர்கள். உங்கள் கண்களுக்கு இன்னும் தீமை தெரிகிறதே என்பதற்காக அழுங்கள். இன்னும் எங்கும் பாவத்தையே பார்க்கின்ற நிலையில் இருக்கிறீர்களே என்பதை நினைத்து அழுங்கள்.
நீங்கள் உண்மையை உணரும்போது உங்கள் கண்களுக்கு நன்மை தீமை எதுவும் தெரிவதில்லை

விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்210

No comments:
Post a Comment