Monday, 19 December 2016

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-22

வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-22
-
-
ந ஜாது காம: காமானாமுபபோகேன சாம்யதி....(விஷ்ணுபுராணம்.4.10.9)
-
” அனுபவிப்பதால், ஒருபோதும் ஆசைகள் பூர்த்தி அடைவதில்லை. நெருப்பில் நெய் ஊற்றுவதால் நெருப்பு தீவிரமாக எரிவதுபோல். அனுபவிப்பதால் ஆசைகளின் தீவிரம் அதிகரிக்கிறது”
-
இந்தக் காலத்தில் துறவு என்பதைப்பற்றி பேசுவதே கடினமாகிவிட்டது. ஐயாயிரம் வருடங்களாகப் புதைந்து கிடந்த ஒரு நாட்டிலிருந்து வந்து துறவைப்பற்றிப் பேசியவன் என்று என்னைப்பற்றி அமெரிக்காவில் பேசிக் கொண்டார்கள். ஆங்கிலத் தத்துவ அறிஞர்களும் ஒருவேளை அப்படித்தான் பேசிக் கொள்வார்களோ என்னவோ? ஆனாலும் துறவுதான் மத உணர்வுக்கு ஒரே வழி என்பது உண்மை. துறவு பூணுங்கள்; பற்றை விடுங்கள்.! நிறை நிலையை அடைவதற்கு ஒரே வழி துறவுதான்
-
இந்த நீண்ட துன்பமிக்க வாழ்க்கைக் கனவிலிருந்து மனம் விழித்தெழும் நாள் ஒன்று வரும். குழந்தை, தன் விளையாட்டை விட்டுவிட்டுத் தாயை நாடி ஓடும் நாள் ஒன்று வரும். அனுபவிப்பதால், ஒருபோதும் ஆசைகள் பூர்த்தி அடைவதில்லை. நெருப்பில் நெய் ஊற்றுவதால் நெருப்பு தீவிரமாக எரிவதுபோல். அனுபவிப்பதால் ஆசைகளின் தீவிரம் அதிகரிக்கிறது என்ற உண்மையை மனம் அப்போது புரிந்து கொள்கிறது.
-
மனித மனம் அனுபவிக்கக்கூடிய புலனின்பங்கள், அறிவாற்றல் மூலம் பெறும் இன்பங்கள் மற்றும் எல்லா இன்பங்களுக்கும் இது பொருந்தும், ஆனால் உண்மையில் அவற்றிற்கு எல்லாம் மதிப்பே இல்லை. அவை மாயைக்குக் கட்டுப்பட்டவை. கடக்க முடியாத மாயை என்ற வலைக்குள் அவை சிக்கியிருக்கின்றன. நாம் இந்த நிலையிலேயே முடிவில்லாமல் உழன்று கொண்டிருக்கலாம். எப்போதாவது ஒரு துளி இன்பத்தைப் பெற நாம் போராடினால், மலை போன்ற துன்பம் வந்து நம்மேல் விழுந்து அழுத்துகிறது. இது எவ்வளவு பரிதாபத்திற்கு உரியது! இதை நினைத்துப் பார்க்கும்போது, எல்லாமே மாயை என்ற இந்தச் சித்திரம் ஒன்றுதான் சிறந்த ஒரே விளக்கமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
-
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்224

No comments:

Post a Comment