Sunday, 4 December 2016

உண்மைக்காக அனைத்தையும் துறந்த ஒருவர் இருக்கிறாரா?

உண்மைக்காக அனைத்தையும் துறந்த ஒருவர் இருக்கிறாரா?
-
1900 மார்ச் மாதம். வடகலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சி
-
சி.ப்ரௌன் என்பவர் மதவிசயங்களில் ஈடுபாடுள்ள இளைஞர். ஒரு நாள் அவர் மிலிட்ஸ் என்ற கிறிஸ்தவ மத போதகரின் சொற்பொழிவிற்கு சென்றிருந்தார். அன்றைய சொற்பொழிவில் அந்த போதகர், உண்மைக்காக அனைத்தையும் துறப்பது பற்றி நான் உங்களிடம் பேசுகிறேன்.“அத்தகைய ஒருவர் இருந்தால் எங்களிடம் காட்டுங்கள் என்று நீங்களும் அடிக்கடி கேட்கிறீர்கள்.
-
”இதோ அத்தகையதோர் உண்மைத் துறவியை உங்களுக்குக் காட்டுகிறேன். அவர் சமீபத்தில் இந்தியாவிலிருந்து வந்துள்ளார். அவரது பெயர் சுவாமி விவேகானந்தர். நீங்கள் அனைவரும் சென்று அவரது சொற்பொழிவைக் கேளுங்கள் . அவர் இந்தியாவின் மாபெரும் ஆச்சார்யர்கள் மற்றும் மாபெரும் முனிவர்களுள் ஒருவர்.”
என்று மிலிட்ஸ் என்ற கிறிஸ்தவ மதபோதகர் தெரிவித்தார்.
-
இதை கேட்ட பிறகு தான் மிலிட்ஸ் என்பவர் சுவாமிஜியின் சொற்பொழிவைக்காண வந்தார்.
அது பற்றி அவரே விவரிக்கிறார்.
-
நாங்கள் சென்றபோது சுவாமிஜி வந்திருக்கவில்லை சிறிது நேரத்திற்குப்பிறகு, காவியுடை அணிந்த ஒருவர் அருகிலுள்ள சிறிய அறையிலிருந்து மேடையை நோக்கிச் சென்றார்.”இவர் யார்? சக்கரவர்த்தியாக இருப்பாரோ” என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஒருவேளை தெய்வம் நேரில் வந்து நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவரது நடை-ஆளப்பிறந்த ஒருவரின் நடை அது!. அவர் சென்று மேடையில் அமர்ந்ததும் பார்வையாளர்களிடையே பலத்த கைதட்டல் ஒலி எழுந்தது .அவர் அந்த ஒலியால் எந்த சலனமும் இல்லாதவராக இருந்தார் .அவரது அகத்தில் நிறைந்திருந்த பூரண அமைதி முகத்தில் பொலிந்திருந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து பார்வையாளர்களை நோக்கித் தமது கைகளை உயர்த்தினார். கூட்டத்தினரிடையே அந்தக் கணமே பூரண அமைதி நிலவியது..” இவ்வளவு பெரிய கூட்டத்தை தன் கைகளாலேயே கட்டுப்படுத்துகிறாரே”
-
பிறகு அவர் பேச ஆரம்பித்தார். சொற்பொழிவு முடிந்ததும் அனைவரும் வரிசையில் நின்று அவருடன் கைகுலுக்கினர். பலரிடம் அவர் ஓரிரு வார்த்தைகள் பேசினார்
-
அவரது சொற்பொழிவைக் கேட்டபின் டாம் என்பவர் பரவசத்துடன் கூறினார், நான் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மனிதர் அல்ல, தெய்வம். அவர் சத்திய வார்த்தைகளையே பேசுகிறார்.
-
இந்த சொற்பொழிவு முடிந்ததும் க்ரோனிகிள் பத்திரிக்கை நிரூபர் பேட்டி எடுக்க வந்திருந்தார்
-
நிரூபர்..”சிகாகோ சர்வமத மகாசபைக்குப் பிறகு நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்குச் சென்ற போது மன்னர்களும் உங்கள் காலடியில் மண்டியிட்டு வணங்கினார்கள், பல மன்னர்கள் தெருவழியாக நீங்கள் அமர்ந்திருந்த வண்டியை இழுத்துச்சென்றார்கள் என்றெல்லாம் இங்குள்ள பத்திரிக்கைகளில் செய்தி வருகின்றனவே,அவை உண்மையா? நாங்கள் எங்கள் மதத்தலைவர்களை இப்படியெல்லாம் கொண்டாடுவது கிடையாது.
-
சுவாமிஜி..அது பற்றிபெல்லாம் பேசுவது அவ்வளவு சரியல்ல.ஒன்று மட்டும் சொல்லலாம். இந்தியாவில் மதம்தான் ஆள்கிறது. பணம் அல்ல.
(சுவாமிஜி தற்புகழ்ச்சியை விரும்பாதவர், இறைவனே அனைத்தையும் செய்பவர். நான் அல்ல என்பதை உணர்ந்தவர். எனவே அவ்வாறு அடக்கத்துடன் பேட்டியளித்தார்)
--
-
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment