வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-16
---
யேயம் ப்ரேதே விகித்ஸா மனுஷ்யே....(கடோபநிடதம்.1.1.20)
”இறக்கின்ற மனிதனைப் பற்றி விவாதம் ஒன்று எழுகிறது. அவன் அடியோடு மறைந்துவிட்டான் என்று ஒரு சாராரும், அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று இன்னொரு சாராரும் அடித்துச் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? ”
. மனஇயல், தத்துவம், மதம் இவை மூன்றும் உண்மையில் இந்தக் கேள்விக்கான பதில்களால்தான் நிரம்பியுள்ளன.
அதேவேளையில் இந்த கேள்வியை கேட்காமல் வாழுவது தான் நல்லது , இதுபற்றி சிந்தித்தால் மனஅமைதி குறைந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் மரணம் என்பது இருக்கும் வரையில், இந்த கேள்விகள் வந்துகொண்டே தான் இருக்கம்.

மரணத்திற்கு அப்பால் ஒன்றுமே இல்லையென்று நாம் பேசலாம். நம் எதிர்பார்ப்புகள் ஆசைகள் எல்லாவற்றையும் நிகழ்காலத்திற்குள் அடக்கிவிட்டு, புலன்களால் அனுபவிக்கப்படுகின்ற இந்த உலகிற்கு அப்பால் ஏதாவது இருக்கிறதா என்று நினைக்காமல் இருப்பதற்குக் கடுமையாகப் போராடலாம்.
ஆனாலும் மரணம் என்பது இருக்கும்வரையில் இந்தக் கேள்வி மறுபடியும் மறுபடியும் எழவே செய்யும்.
உண்மைகளிலெல்லாம் சிறந்த உண்மை, பொருட்களிலெல்லாம் சிறந்த பொருள் என்றெண்ணி நாம் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் இந்த எல்லா பொருட்களின் முடிவு மரணம் என்பதுதானா? கண நேரத்தில் உலகம் கரைந்து மறைந்து விடுகிறது. செங்குத்துப் பாறை ஒன்றின் விளம்பில் நின்றுகொண்டு, விரிந்து பரந்து கிடக்கின்ற எல்லையற்ற வெளியைக் காணும் எந்த மனமும், எவ்வளவுதான் கல்லாக இருந்தாலும் பயந்து பின்வாங்கி, இது உண்மைதானா? என்று கேட்கும் நிலை வந்தே தீரும்.
மனித மனம் தன் சக்திகளையெல்லாம் திரட்டிச் சிறிதுசிறிதாக வாழ்க்கை முழுவதும் வளர்த்த எதிர்பார்ப்புகள் எல்லாம் கண நேரத்தில் மறைந்துவிடுகின்றன. அவை உண்மைதானா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியே தீரவேண்டும் காலம் இந்தக் கேள்வியின் வலிமையைக் குறைப்பதில்லை. மாறாக அதிகரிக்கவே செய்கிறது.
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்187

No comments:
Post a Comment