Sunday, 4 December 2016

வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-19

வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-19
---
இந்த்ரம் மித்ரம் வருணமக்னி மாஹுரதோ திவ்ய....ஏகம் ஸத்விப்ரா பஹுதா....(ரிக்வேதம்.1.164.46)
-
”இந்திரன் ,மித்ரன்,வருணன் என்றெல்லாம் அழைக்கப்படுவது உள்ளது ஒன்றே,மகான்கள் அவரைப் பல பெயரிட்டு வழங்குகிறார்கள்”
-
அந்த பண்டைய காலத்தில் இன்றுபோல் மனிதன் அவ்வளவு நாகரீகம் படைத்தவனாக இருக்கவில்லை, தான் நினைத்ததைவிட சிறிது வேறாக சிந்தித்தான் என்பதற்காக சகோதரனின் தலையை துண்டிக்க வேண்டும் என்று மனிதன் எண்ணம் கொள்ளவில்லை. அவன் உலகை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கவில்லை. இந்த வாக்கியம் அன்றைக்கு இருந்தது போல் இன்றைக்கும் புத்துணர்வுடன் வாழ்வளிக்கும் ஒன்றாக நம்முன் வருகிறது.
-
இருப்பது ஒன்றே மகான்கள் அதைப்பல பெயர்களால் வழங்குகிறார்கள்.
-
உலகிலுள்ள எல்லா மதமும்,அது இந்து மதமோ,புத்தமதமோ, முகமதிய மதமோ, கிறிஸ்தவ மதமோ எதுவாக இருந்தாலும் சரி. அனைத்திற்கும் கடவுள் ஒருவரே. இந்த மதங்களுள் எந்த மதத்தையும் பழிப்பவன் தனது கடவுளைப் பழிப்பவனே. இது நாம் கற்க வேண்டிய முக்கியபாடமாகும்.
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்221

No comments:

Post a Comment