Monday 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-4

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-4
(சுவாமி விவேகானந்தர்)
-
நாம் பிறந்த இந்து மதத்தின் பொது அடிப்படைகளைப் பார்ப்போம்.
-
3.இறைவன்,ஆன்மா,உலகம்
-
இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,அழிப்பவனே இறைவன்.
-
4. ஆன்மா மற்றும் மறுபிறவி கோட்பாடு.
-
கணக்கற்ற தனி ஆன்மாக்கள் தத்தம் வினைக்கேற்ப மீண்டும்,மீண்டும் உடலெடுத்து பிறப்பு-இறப்புச் சுழலில் உழன்றுகொண்டிருக்கிறது. இதுவே சம்சாரம்.இயற்கையிலிருந்து முற்றிலும் விடுபடும்வரை இந்த ஆன்மாக்கள் இவ்வாறு மறுபிறப்பு எடுத்துக்கொண்டே இருக்கின்றன.
-
5. பிரபஞ்சம்
-
ஆதியும் அந்தமும் இல்லாத இந்த பிரபஞ்சம் இறைவனிடமிருந்து வெளிப்படுகிறது.சிறிது காலத்திற்கு பிறகு இறைவனிடம் ஒடுங்குகிறது. மீண்டும் வெளிப்படுகிறது. இவ்வாறு தொடந்து நடந்துகொண்டே இருக்கிறது.
-
6.மனம்
-
இந்துக்கள் மனம் வேறு ஆன்மா வேறு என்பதை அறிந்திருக்கிறார்கள்.
-
7.அவதார கோட்பாடு
-
மனிதனை இறைவனாகக் காண்பதே அவதார கோட்பாட்டின் நோக்கம். மனிதனில் இறைவனைக் காண்பதே உண்மையான இறைக்காட்சி.
-
8.உருவவழிபாடு
-
ஒரே தெய்வத்தின் பல்வேறு பெயர்களே, சிவன்,விஷ்ணு,கணபதி,தேவி போன்றவை. பக்தர்கள் வழிபடுவதற்காக பல்வேறு வடிவங்களில் வழிபடுகிறார்கள். உருவ வழிபாட்டை எதிர்க்கின்ற சீர்திருத்தவாதிகளுக்கு நான் ஒன்று சொல்கிறேன், சகோதரர்களே,புற உதவி எதுவும் இன்றி உருவமற்றவராக இறைவனை வழிபடும் தகுதி உங்களுக்கு இருந்தால் அவ்வாறே செய்யுங்கள்.ஆனால் அவ்வாறு செய்ய முடியாதவர்களை ஏன் நிந்திக்கிறீர்கள்?
-
---தொடரும்--

வேதங்கள்
-
வேதங்கள் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
-
கர்ம காண்டம் பலவிதமான யாகங்களையும் சடங்குகளையும்பற்றிக் கூறுகிறது. தற்காலத்தில் அவற்றுள் பலவும் வழக்கத்தில் இல்லை. வேதங்களில் ஆன்மீக உபதேசங்கள் அடங்கிய பகுதியான உபநிடதங்களும் வேதாந்தமும் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகிறது.
-
துவைதி, விசிஷ்டாத்வைதி, அத்வைதி என்ற வேறுபாடின்றி, நமது ஆச்சாரியர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இவற்றை மிகவுயர்ந்த பிரமாணமாக ஒப்புக் கொள்கின்றனர். எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும், எந்தத் தத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும் உபநிடதங்களையே தங்கள் பிராமாண சாஸ்திரமாகக் கொள்ள வேண்டும்.
-
வேதங்களை பின்பற்றுவதால் இந்துக்களை வேதாந்தி என்றும் அழைக்கலாம்
-
சமீப காலங்களில் வேதாந்தத் தத்துவத்தின் அத்வைத நெறியைக் குறிக்கவே வேதாந்தம் என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்துகின்றனர், ஆனால் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பல்வேறு தத்துவப் பிரிவுகளுள் அத்வைதமும் ஒன்று, அவ்வளவுதான். வேதாந்தம் என்பது துவைதம்,விசிஷ்டாத்வைதம்,அத்வைதம் மூன்றும் சேர்ந்தது.
-
நமது சாஸ்திரங்களை விளக்க ஸ்மிருதிகளும் புராணங்களும் ஏற்பட்டன, வேதங்களுக்கு உள்ள அதிகாரம் இவற்றிக்கு இல்லை. புராணங்களும் ஸ்மிருதிகளும் வேதங்களின் எந்தப் பகுதியிலிருந்தேனும் வேறுபடுமானால் வேதங்களையே பின்பற்ற வேண்டும், ஸ்மிருதியை விலக்கி விட வேண்டும் என்பது நியதி.
--
---தொடரும்--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்5பக்கம்.193
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment