இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-12
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதங்கள் பற்றி பார்ப்போம்-1
--
இந்துக்களின் சாஸ்திரங்கள் வேதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
-
அந்த நூல் தொகுதிகள் எண்ணற்றவை. அவற்றின் மூலங்கள் மட்டும் இங்கே கொண்டு வந்தால்கூட இந்த அறைக்குள் அவை அடங்காது. அவற்றுள் பல தொலைந்துவிட்டன.அவை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு புரோகிதரின் பொறுப்பில் விடப்பட்டது. அவற்றை மனப்பாடம் செய்வதன் மூலம் அவற்றை அழியாமல் காத்துவந்தனர்.இத்தகைய மனிதர்கள் இன்றும் உள்ளனர். ஓசையளவில்கூட சிறு பிசகின்றி புத்தகம் புத்தகமாக அவர்கள் ஒப்பிப்பார்கள்.
-
பல்வேறு படையெடுப்பின் காரணமாக வேதத்தை மனப்பாடம் செய்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்த வேதத்தின் அந்த பகுதியும் இவர்களுடன் அழிந்துவிட்டது.
-
வேதங்களின் பெரும் பகுதி தொலைந்துபோய்விட்டது.எஞ்சியுள்ள சிறு பகுதி மட்டுமே தனியாக ஒரு நூல்நிலையமாக அமைக்கக்கூடியது.
-
இவற்றின் மிகப்பழைய தொகுதியில் ரிக்வேதத்துதிகள் அடங்கியுள்ளன.
வேதங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று உபநிடதங்கள் அல்லது ஞானகாண்டம்,மற்றது கர்மகாண்டம்.
-
கர்மகாண்டத்தை சற்று விளக்குவோம்.
-
சடங்குகளும் பல தேவதைகளைப்பற்றிய பலவகையான துதிப்பாடல்களும் அதில் உள்ளன. சடங்குகள் பல கிரியைகள் அடங்கியவை.அவற்றுள் சில மிக விரிவானவை.அவற்றைச்செய்ய பல புரோகிதர்கள் தேவை. சடங்குகளின் விரிவால் புரோகிதத் தொழிலே தனியொரு சாஸ்திரமாயிற்று. படிப்படியாக இந்த சடங்குகளிலும் துதிகளிலும் பொதுமக்களுக்கு மதிப்பு வளர்ந்தது. தேவதைகள்கூட மறைந்து அவர்களது இடத்தை இந்தச்சடங்குகள் பிடித்துக்கொண்டன.
-
இந்த கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்களில் மீமாம்சகர்கள் என்ற ஒரு பிரிவினர் தேவதைகளை நம்புவதில்லை,மற்றவர்கள் நம்புகிறார்கள்.
-
புரோகிதர்கள் இந்த துதிகளைப்பாடி,அக்கினியில் ஆஹுதி அளிப்பார்கள்.அவற்றின் சொற்களுக்கே பல பயன்களை அளிக்கும் சக்தியுண்டு என்று அவர்கள் சுறுகிறார்கள். இயற்கைக்கு உட்பட்ட மற்றும் இயற்கையை மீறிய அனைத்து சக்திகளும் அங்கு உள்ளன.
-
வேதங்கள் ஒரு அபூர்வசக்தியுள்ள வெறும் வார்த்தைகள் மட்டுமே. அவற்றை சரியாக உச்சரித்தால் விளைவுகளை உண்டாக்கவல்லது.ஓர் உச்சரிப்பு தவறானாலும் பலன் தராது. மற்ற மதங்களின் பிரார்த்தனைகள் போல் அல்லாமல் வேதங்களே இவர்களை பொறுத்தவரை தெய்வங்கள்.வேதங்களின் சொற்களுக்கு எவ்வளவு உயர்வான இடம் அளிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து நீங்கள் உணரலாம்.
--
தொடரும்....
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்7பக்கம்.82
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment