Monday, 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-5


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-5
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதாந்தம் என்பது வேதங்கள்தாம் .இருப்பவற்றுள் மிகப் பழமையானவை வேதங்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். 
-
தற்கால அறிஞர்களின் கருத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் வேதங்களின் சில பகுதிகள் ஒரு காலத்திலும் பிற பகுதிகள் வேறு காலத்திலும் எழுதப்பட்டதாக ஒப்புக்கொள்ள இந்துக்கள் தயாராக இல்லை. அவை ஒரே சமயத்தில் உண்டாக்கப் பட்டவை என்ற தங்கள் கருத்தையே அவர்கள் நம்புகிறார்கள். வேறு விதமாகச் சொல்வதானால் அவை ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை, எப்போதும் இறைவனின் திருவுள்ளத்தில் அவை இருக்கின்றன என்பதே அவர்கள் கருத்து.
-
தீவிரமாக ஆராய்ந்து பார்த்தால் பௌத்தத்தின் சாரம் முழுவதும் உபநிடதங்களிலிருந்தே எடுக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். ஏன் அவர்களின் நல்லொழுக்கக்கோட்பாடுகள், அற்புதமானவை, மகத்தானவை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே, அந்த நல்லொழுக்கக் கோட்பாடுகள் கூட ஏதோவோர் உப நிடதத்தில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதைக் காணலாம். அவ்வாறே, சில விசித்திரக் கொள்கைகள் தவிர சமணர்களின் சிறந்த கோட்பாடுகள் அனைத்தும் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டவையே.
-
ஒவ்வோர் உபநிடதத்திலும் பக்திக்கருத்துக்கள் வேண்டிய அளவு உள்ளது நீங்கள் சற்று தேடிப்பார்க்க வேண்டும், அவ்வளவுதான். பிற்காலத்தில் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் முழு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன.
-
மதம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் தமது சமுதாயத்தில் உள்ளன. இவற்றுக் கெல்லாம் இந்து சாஸ்திரங்களின் சம்மதமும் இல்லை இன்னும் சில பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் உள்ளன; அவற்றைப்பற்றிப் புத்தகங்களில் படிக்கிறோம், பார்க்கவும் வியப்பாக இருக்கிறது. இவற்றிற்கு வேதங்கள் ஸ்மிருதிகள்,புராணங்கள் எவற்றின் சம்மதமும் கிடையாது; இவை வெறும் வட்டார வழக்கங்கள்.
-
-
எனினும் அந்தச் சிறு வழக்கம் கூட அழிந்து போகுமானால், தான் ஓர் இந்துவாக நிலைக்க முடியாது என்றே ஒவ்வொரு பாமர கிராமவாசியும் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் வேதாந்தமும் ஒன்றுதான் அந்தச் சிறிய வட்டார வழக்கமும் ஒன்று தான். தான் செய்வதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை .அவர்கள் அப்படிப்பட்ட வழக்கங்களை விட்டுவிடுவது நல்லது .
-
---தொடரும்--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்5பக்கம்.196
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment