தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-16
-
மிக நீண்ட இரவு விலகுவதுபோல் தோன்றுகிறது மிகக்கடுமையான துன்பம் கடைசியாக முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது. நமது பாரதத்தாய் நீண்ட ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கிறாள். அவள் விழித்து வருவதைக் குருடனும் குதர்க்கவாதிகளும் காண முடியாது. அவளை யாரும் தடுக்க முடியாது. இனிஅவள் தூங்கப் போவதுமில்லை. புற சக்திகள் எதுவும் அவளை அடிமைப்படுத்தவும் முடியாது. ஏனெனில் அவளது காலடியில் எல்லையற்ற ஆற்றல் எழுந்து கொண்டிருக்கிறது.

ராமநாதபுர மன்னர் அவர்களே ! ராமநாதபுரத்தின் குடிமக்களே நீங்கள் அன்போடும் கனிவோடும் எனக்கு அளித்த வரவேற்பிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அன்பையும் கனிவையும் என்னால் உணர முடிகிறது. ஏனெனில் வாய்ச் சொற்களை விட இதயத்துடன் இதயம் பேசுவதே உயர்ந்த மொழி. உயிருடன் உயிர் கலந்து ஆழ்ந்த அமைதியில் அவை பேசுகின்ற அந்த மொழி சிறிதும் தவறில்லாத தூய மொழி. அதை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கிறேன்.
-
-
மேன்மை தங்கிய மன்னரே, தாங்கள் ஏற்கனவே கூறியது போல் மகத்தான வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது; வியக்கத்தக்க ஆற்றல்கள் செயல் படத்தப்பட வேண்டியுள்ளது.
-
மற்ற நாடுகளுக்கு நாம் பலவற்றைப் போதிக்க வேண்டியுள்ளது. தத்துவத்தின், ஆன்மீகத்தின், பண்பின், இனிமையின், மென்மையின், அன்பின் தாயகம் இந்தப் பூமி. இந்தக் குணங்கள் இன்றும் இருக்கின்றன. பல நாடுகளுக்குச் சென்றதில் கிடைத்த என் அனுபவங்கள் எனக்கு இதையே அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் இந்தக் குணங்கள் இன்றும் மிகச்சிறந்த அளவில் இருக்கிறது. என்பதை உறுதியாக, தைரியமாக என்னால் சொல்ல முடியும்.

சுவாமி விவேகானந்தர் ராமநாதபுரத்தில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-17
-
நமது இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்டின் அடித்தளமாகவும் முதுகெலும்பாகவும் உயிர்நிலை மையமாகவும் இருப்பது மதம், மதம் மட்டுமே.

அன்பர்களே , நாம் இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியவை சில உள்ளன
-
ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு காலம் கொடுமையிலும் அன்னிய ஆதிக்கத்திலும் அவர்களின் தண்டனைகளின் கீழும் வாழ்ந்தும் இந்த நாடு அழியாமல் இருப்பதற்குரிய ஒரே காரணம், இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியதை அது பெற்றிருப்பது தான். இந்த நாடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அது கடவுளையும் மதம் மற்றும் ஆன்மீகக் கருவூலங்களையும் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது அரசியல் பேராசைகளாலும் சமூகத்திட்டங்களாலும் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்ட, பாதி செத்துவிட்ட மேலை நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் புதிய வாழ்வையும் புதிய சக்தியையும் வெள்ளம் போல் பாய்ச்சுவதற்கான மதம் மற்றும் ஆன்மீகத்தின் ஊற்றுக்கள் இன்னும் இந்த நாட்டில் நல்ல தான் இருக்கின்றன.
-
-
சுவாமி விவேகானந்தர் ராமநாதபுரத்தில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---
-
---விவேகானந்தர் விஜயம்---
-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-18
-
-
-இந்தியச் சூழலை நிறைத்துக் கிளம்புகின்ற, இயைபானதும் மாறுபட்டதுமான பல்வேறு குரல்களுக் கிடையே மகத்தான, தனித்தன்மையான, முழுமையான ஒரு குரல் எழுகிறது; அது துறவு. துறந்துவிடு! இதுதான் இந்திய மதங்களின் அடிப்படையான கருத்து,
-
இந்த உலகம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்ற ஒரு மாயை . இப்போதைய வாழ்க்கையும் வெறும் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே. இதற்குப் பின்னால், மாயையாகிய இந்த உலகத்திற்கு பின்னால் எல்லையற்ற ஒன்று உள்ளது; அதனை நாம் தேடுவோம். முடிவில்லாதாகக் கருதப்படுகின்ற இந்தப் பிரபஞ்சம்கூட ஒரு சேற்றுக்குட்டை மட்டுமே என்று எண்ணுகின்ற ஆற்றல்மிக்க பரந்த மனங்களாலும் அறிவாலும் ஒளிபெறுகின்ற நாடு இது.
-
இதற்குப் பின்னால், காலம், எல்லையற்ற காலம்கூட அவர்களைப் பொறுத்தவரை வெறுமையே. காலத்திற்கும் அப்பால் வெகு அப்பால் அவர்கள் செல்கிறார்கள். இப்படி,இந்த உலகம், காலம், இடம் அனைத்தையும் கடந்து செல்வதுதான் மதத்தின் ஆதாரம்.
-
எல்லாவற்றையும் கடந்து செல்வது தான், அனைத்தையும் கடந்து செல்வதற்கான இந்தப் போராட்டம்தான், எதனை இழக்க நேரினும், எந்த ஆபத்துக்களை எதிர் கொள்ள நேரினும் எல்லாவற்றிக்கும் அப்பால் இருக்கின்ற ஒன்றின் காட்சியைப் பெறுவதற்காக இயற்கையின் முகத்திரையைக் கிழிக்கின்ற தைரியம்தான் நமது நாட்டின் பண்பு. அதுவே நமது லட்சியம்.
-
இந்த உலகத்திடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருக்கிறதா? ஆம் ; உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, நிறுவனங்களின் சக்தி, அதிகாரங்களைக் கை யாளும் திறமை, நிறுவனங்களை உருவாக்குகின்ற திறமை, குறைந்த சக்தியைச் செலவழித்து அதிக பலன்களை அடையும் -திறமை- இவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு மேலை நாட்டிடமிருந்து ஒரு வேளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-19
-
உண்பதும் உடுப்பதும் குடித்துக் களிப்பதுமான லட்சியத்தை இந்தியாவில் யாராவது உபதேசித்தாலும், உலகியல் வாழ்க்கையை ஆன்மீகத்திற்குள் புகுத்த நினைத்தாலும் அவன் பொய்யன். இந்தப் புனித பூமியில் அவனுக்கு இடமில்லை; அவனது பேச்சைக் கேட்கவும் இந்திய மனம் விரும்பாது.
-
மேலை நாகரீகம் மினுமினுப்பும் பளபளப்பும் கொண்டதாக இருக்கலாம், நாசூக்கானதாக இருக்கலாம் , அதிகார ஆற்றல் மிக்கதாக இருக்கலாம் . ஆனால் அவை அனைத்தும் வீண் என்பதை இந்த மேடையில் நின்று கொண்டு அவர்களின் முகத்திற்கு நேராகச் சொல்கிறேன். அவை வெறும் டம்பமே.கடவுள் மட்டுமே வாழ்கிறது. ஆன்மீகம் மட்டுமே வாழ்கிறது. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
-
என்றாலும், மிக உயர்ந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் பெறாத சகோதரர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்பத் தீவிரம் குறைக்கப்பட்ட சிறிது உலகாயதம் ஒருவேளை நன்மையை தரலாம். அவர்கள் மீது உயர் உண்மைக்களை திணிக்ககூடாது. சமீப காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திலும் இந்தக் தவறே செய்யப்பட்டு வருகிறது. உயர் உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் இல்லாதவர்களிடமும் அவை திணிக்கப் படுகின்றன. இப்படித் திணிப்பது தவறு என்ற உண்மை நன்றாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற இந்தியாவில் மிகவும் வேதனை தருகின்ற அளவில் இது நடைபெறுகிறது.
-
என் வழி உங்கள் வழியாக இருக்க வேண்டிய தில்லை. இந்து வாழ்க்கையின் லட்சியம் சன்னியாசம் என்பது உங்களுக்குத் தெரியும்; எல்லோரையுமே துறக்கும் படி நமது சாஸ்திரங்கள் கட்டாயப்படுத்துகின்றன. உலகியல் இன்பங்களை அனுபவித்த பிறகு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஒவ்வொர் இந்துவும் உலகைத் துறக்க வேண்டும். அப்படித் துறக்காதவன் இந்து அல்ல . அவன் தன்னை இந்து என்று கூறிக்கொள்ள உரிமையில்லை .உலக வாழ்வின் நிலைமையைத் கண்ட பிறகு , வாழ்க்கையை அனுபவித்தபிறகு அதை விட்டு விட வேண்டும் இதுதான் லட்சியம் என்பது நமக்குத் தெரியும் . -
ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு அனுபவம் ஏற்பட்ட பிறகே, அந்த லட்சியத்தை அடைய முடியும். துறவின் உண்மையை ஒரு குழந்தைக்குப் போதிக்க முடியாது. குழந்தை இன்பநோக்குடன் பிறக்கிறது; அதன் உலகம் புலன்களிலேயே உள்ளது; அதன் வாழ்க்கை முழுவதும் புலன்களில் உள்ளது; இந்தக் குழந்தையைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவு அனுபவம் வேண்டும், போகம் வேண்டும்; இவற்றின் மூலம் அவர்கள் உலகின் நிலையாமையை அறிந்து கொள்வார்கள். அதன்பிறகே அவர்களுக்குத் துறவு வரும். நமது சாஸ்திரங்களில் அத்தகையோருக்கான வழிகள் நிறைய உள்ளன.
-
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது. சாதாரண ஏழையின் வாழ்க்கைக்கு கூட அவனுக்கு சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப்பட்டுள்ளது. உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள் ! அவன் வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கட்டும்று. அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். தானாகவே அவனிடம் துறவு தோன்றும்.

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-20
-
மிகக் கீழான ஜாதியில் பிறந்தவராயினும் அறிவால் உயர்ந்திருப்பின் அவரிடமிருந்து உயர் அறிவை மிகுந்த பக்தியுடன் கற்றுக் கொள். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரிமிருந்து வருமானாலும் முக்திக்கு உரிய வழியை அவருக்கு தொண்டுகள் செய்து அறிந்து கொள். -ஒருத்தி சிறந்தவளாக இருப்பாமானால், கீழான குலத்தில் பிறந்திருந்து தாலும் அவனை மணந்து கொள் - இவை நமது மகத்தான இணையற்ற சமுதாய விதி
அமைப்பாளரான, தெய்வீக மனு அமைத்த சட்டங்கள்.
-
இது உண்மை உங்கள் சொந்தக் காலிலேயே நில்லுங்கள். உங்களால் முடிந்தவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் இந்து என்ற வகையில் அவை எல்லாம் நமது தேசியக் கொள்கைகளுக்கு அடுத்த படியிலேயே இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த நோக்கம், கணக்கில்லாத அவனது கடந்தகால கர்மங்களின் விளைவாகும். அது போல் உங்கள் பெருமைக்குரிய நாட்டின் முடிவில்லாத கடந்தகால வாழ்க்கையின் முழுமையான விளைவான மிகச் சிறந்த பாரம் பரியத்துடன் நீங்கள் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறீர்கள்.
-
லட்சக்கணக்கான உங்கள் முன்னோர் உங்கள் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களள் என்று தோன்றுகிறது. எனவே விழிப்போடு இருங்கள்.
-
ஒவ்வோர் இந்துக் குழந்தையும் எந்த நோக்கத்துடன் பிறக்கிறது? தர்மமாகிய புதையலைக் காப்பதற்கே என்றல்லவா . இது பிராமணனின் லட்சியம் மட்டுல்ல , இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பூமியில் பிறக்கின்ற ஆண் பெண் பேதமின்றி ஒவ்வொரு குழந்தையின் லட்சியமும் தர்மமாகிய புதையலைக் காப்பதே என்று நான் கூறுவேன். வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகள் எல்லாம் அந்த நோக்கத்திற்கு அடுத்த படியிலேயே வைக்கப்பட வேண்டும் .

--
No comments:
Post a Comment