இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-20
(சுவாமி விவேகானந்தர்)
-
யோகம்-தியானம்-சமாதி-பாகம் .2
-
அடுத்து வருவது நியமம். அன்றாட ஆசாரங்களும் நியதிகளும் அடங்கியது இது. யோகத்தில் வெற்றி பெற இது உதவுகிறது.
-
2Aதபஸ்-தவம்;
2Bஸ்வாத்யாயம்-கல்வி;
2C ஸந்தோஷம்-திருப்தி;
2Dசவுசம்-தூய்மை;
2Eஈசுவர ப்ரணி தானம்-இறைவழிபாடு-இவை நியமம்.
-
2A.உண்ணாநோன்பின் மூலமோ வேறு வழிகளாலோ உடலை அடக்கியாள்தல் உடல் சம்பந்தமான தவம்.
-
2B.வேதங்களையும் மற்ற மந்திரங்களையும் ஓதுவது ஸ்வாத்யாயம். இதனால் உடலில் உள்ள சத்வப் பகுதி தூய்மை அடைகிறது. மந்திரங்களை உச்சரிப்பது மூன்று வகைப்படும். வாசிகம், உபாம்சு, மானசம், வாசிகம் மிகத் தாழ்ந்தது. மானசம் மிகவுயர்ந்தது. உரக்க உச்சரித்தல் வாசிகம். உதடு அசைந்து ஒலி வராமல் உச்சரிப்பது உபாம்சு. வெளியில் கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து. அதனுடன் மந்திரத்தின் பொருளையும்
சிந்திப்பது மானசம். இதுவே மூன்றிலும் உயர்ந்த முறை.
-
2C.இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழ்வது
-
2D.தூய்மை என்பது அகத் தூய்மை புறத் தூய்மை என இருவகைப்படுவதாக மகான்கள் கூறுகின்றனர். உடலை நீராலோ மண்ணாலோ வேறு பொருட்களாலோ தூய்மை செய்வது அதாவது குளித்தல் போன்றவை புறத்தூய்மை. வாய்மையாலும் மற்ற எல்லா நற்குணங்களாலும் மனத்தைத் தூய்மைப்படுத்துவது அகத்தூய்மை. இரண்டுமே தேவை. அகத்தில் தூய்மை, புறத்தில் அழுக்கு என்றால் அது சரியாகாது. இரண்டும் சேர்ந்து வாய்க்க முடியாதபோது அகத் தூய்மையை நாடுவது நல்லது. ஆனால் இருவகைத் தூய்மையும் இல்லாமல் ஒருவன் யோகியாக மாட்டான்.
-
2E. ஸ்தோத்திரம், சிந்தனை, பக்தி-இவைமூலம் இறைவனை வழிபட வேண்டும். யமம், நியமம்பற்றிக் கூறினோம்.
-
3.அடுத்தது ஆசனம். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் மார்பும் தோள்களும் தலையும் நேராக இருக்க வேண்டும். உடம்பு இறுக்கமின்றித் தளர்வாக இருக்க வேண்டும் என்பதுதான்.
--
தொடரும்
-
--விவேகானந்தர் விஜயம்--
No comments:
Post a Comment