Monday, 19 December 2016

பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி-பாகம்-1

சுவாமி விவேகானந்தர் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி-பாகம்-1
-
நான் இந்து மதத்தை சார்ந்தவன். இந்துமதம் என்பது புத்தமத கொள்கையல்ல.இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்றே புத்தமதம். நாங்கள் ஒருபோதும் பிரச்சார பணியில் ஈடுபடுவதில்லை. எங்கள் தத்துவங்களை யார்மீதும் திணிப்பதில்லை. உங்கள் கிறிஸ்தவமத பிரச்சாரகர்களை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
-
எங்கள் முயற்சியின்றியே இந்துமதம் பல வடிவங்களில் உலகமெங்கும் பரவிவருகிறது.எங்கள் மதம் உலகிலுள்ள பிற மதங்களைவிட தொன்மை வாய்ந்தது. கிறிஸ்தவ கொள்கையைவிட பழமையானது. கிறிஸ்தவ மதத்தில் எதிர்ப்பும் விரோதப்போக்கும் காணப்படுவதால் அதை ஒரு மதம் என்று சொல்ல முடியாது. மேலும் கிறிஸ்தவ மதம் இந்துமதத்திலிருந்து தோன்றிய ஒரு கிளை மட்டுமே. கிறிஸ்தவ மதத்தில் உள்ள பாவமன்னிப்பு,புனிதர்களை போற்றுதல் போன்றவை இந்து மதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. கத்தோலிக்க மதம் இந்து மதத்திலிருந்து தோன்றியது என்று ஒரு கத்தோலிக்க பாதிரி துணிந்து கூறினார். அதனை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். அதனால் அவர் பதவியை இழந்தார்.
-
அமெரிக்காவின் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் பத்திரிக்கையில் 14-2-1894 அன்று சுவாமி விவேகானந்தர் கொடுத்த பேட்டி
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்6.பக்கம்344

No comments:

Post a Comment