விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 55
---
1900 ஆண்டு வாக்கில் சுவாமி விவேகானந்தர் தென் கலிபோர்னியாவில் மீட் சகோதரிகளின் வீட்டில் விருந்தினராக வசித்து வந்தார்.
-
சுவாமிஜியின் அன்றாட வாழ்க்கை முறை பற்றி மீட் சகோதரிகள் தெளிவாக விவரிக்கிறார்கள்.
வெளியில் போகும் போதும், யாராவது சந்திக்க வரும்போதும் சுவாமிஜி ஆடை விஷயத்தில் கவனமாக இருப்பார். ஆனால் வீட்டிற்குள் அவர் அது பற்றி பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. ஏன் வீட்டில் எதற்காக தடபடலாக இருக்க வேண்டும்? நான் என்ன திருமணம் செய்துகொள்ளவா போகிறேன்? என்று கேட்பார். பொதுவாக வீட்டில் இருக்கும்போது அங்கி ஒன்றை அணிந்து, இடுப்பில் கயிறு ஒன்றால் கட்டியிருப்பார்.
-
அவரது தலைமுடி சுருள்சுருளாக அழகாக இருக்கும். வெட்டினால் அதன் அழகு குறைந்துவிடும் என்பதற்காக வெட்டாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்வார்கள். சுவாமிஜியும் ஒரு சிறுவனைப்போல அதனை அப்படியே ஏற்றுக்கொள்வார்.”தமது தோற்றத்தை பற்றி அவர் எந்த கவனமும் வைத்ததில்லை. தம்மைப்பற்றிய எண்ணம் துளியும் இல்லாதவர் அவர் என்பார் ஹேன்ஸ்ப்ரோ.
-
சுவாமிஜியின் காலை உணவு மிகவும் எளிமையாக இருக்கும்.முக்கியமாக பழங்கள்,வேகவைத்த இரண்டு முட்டை, இரண்டு ரொட்டி, இரண்டு கப் காபி ஆகியவை இருக்கும். அனைத்தும் மிதமாக அளவே இருக்கும்.மதிய உணவிற்கு காய்கறி, இறைச்சி ஆகியவை இருக்கும். பயிறு பட்டாணி வகைகளை அவர் விரும்பினார்.
பொதுவாக மதிய உணவின் போது அவருடன் யாராவது விருந்தினர்கள் இருப்பார்கள்.அந்த வேளைகளில் இந்தியா பற்றியும் இந்தியர்கள் படும் இன்னல்கள் பற்றியும் அவர் பேசுவார்.
-
காலை வேளைகளில் சொற்பொழிவு இல்லை என்றால், சுவாமிஜி சிறிது நேரம் தோட்டத்தில் உலாவுவார்.அல்லது நூல் நிலையத்தில் சென்று படிப்பார்.
மதிய உணவிற்கு பிறகு சிறிது நேரம் படுத்திருப்பார்.இல்லாவிடில் மிசஸ் வைக்காஃப் வீட்டு வேலைகளைச் செய்யும் போது பேசிக்கொண்டிருப்பார்.சில நேரங்களில் மதிய வேளையில் கடிதங்கள் எழுதுவார்.சுவாமிஜிக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு.
-
மாலை வேளையில் இரவு உணவு தயாரிப்பதற்காக உதவுவார். சில வேளைகளில் தாமே சமைக்கவும் செய்வார். அவர் செய்கின்ற சப்பாத்தியும், கறிகளும் டோரதிக்கும்,ரால்ஃபிற்கும் மிகவும் பிடிக்கும். முதலில் மசாலாப்பொருட்களை அரைத்துக்கொள்வார். நின்றுகொண்டு அரைப்பது அவருக்குப் பிடிக்காது, எனவே சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு அரைப்பார். பிறகு வெண்ணையை தாளிக்கத் தொடங்குவார். புகை என்றாலே மீட் சகோதரிகளுக்கு அலர்ஜி-எரிச்சலால் கண்கள் குளமாகிவிடும். அதனால் தாளிக்கும் முன்,”இதோ வருகிறது புகை!பெண்கள் இந்த இடத்தைவிட்டு அகலுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று உரத்த குரலில் ஓர் அறிவிப்பு செய்வார்.
-
பொதுவாக மாலை 6.30 மணிக்கு இரவு உணவை சாப்பிட்டுவிடுவார்கள். அதில் காய்கறி,பாயாசம், சப்பாத்தி, குழம்பு, மீன் அல்லது இறைச்சி சூப் ஆகியவை இருக்கும். சாப்பாடு முடிந்த பிறகு குளிர்காய்வதற்காக அடுப்பை மூட்டுவார்கள்,சிலர் நாற்காலியில், சிலர் கட்டிலில் என்று வசதியாக அமர்ந்துகொள்வார்கள். சாய்வு நாற்காலியில் சம்மணமிட்டு அமர்வார் சுவாமிஜி. சில வேளைகளில் சாஸ்திரத்தை படித்து பொருள் கூறுவார். சில வேளைகளில் ஆன்மீகம் தொடர்பாக பேசுவார்.ஆனால் அவர் எது பேசினாலும் ஓர் ஆன்மீக அனுபவத்தை கேட்பரின் உள்ளத்தில் நிறைப்பதாகவே இருக்கும்.
-
சமையல் மற்றும் சாப்பாடு நேரம் தவிர மற்ற நேரங்களில் சுவாமிஜி அதிகம் சிரிப்பதோ, வேடிக்கை பேச்சிபேசுவதோ கிடையாது. அவருடன் இருக்கும்ஒவ்வொரு கணமும் நாம் எதையாவது கற்றுக்கொண்டே இருப்போம்.அவர் தமது வாழ்க்கை மூலம் எங்களுக்கு பல பாடத்தை கற்றுத்தந்தார்.
-
குழந்தைகளுடன் முற்றத்தில் விளையாடுவது சுவாமிஜிக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடன் கைகோர்த்தபடி வட்டமாக ஓடி விளையாடுவார். தாமும் விளையாடினால் குழந்தைகள் மகிழ்வார்கள் என்பதற்காக சுவாமிஜி அவர்களுடன் விளையாடுவார். அதே நேரத்தில் அந்த குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் கூர்ந்து கவனித்தார்.அவர்களிடம் பேசுவார், விளையாட்டு, படிப்பு போன்றவற்றை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வார். குழந்தைகளை தண்டிப்பதை அவர் விரும்பவில்லை. குழந்தைகள் பயப்படும் விதமாக நான் எதையும் செய்ய மாட்டேன் என்பார் அவர்.
-
சுவாமிஜியின் சொற்பொழிவில் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்திய ஒரு விஷயம் உண்டு.அது-அவர் தமது சொற்பொழிவிற்கு குறிப்புகள் எதுவும் எடுத்துவராதது தான்.அவர் கூட்டத்திற்கு வந்த பிறகு தான் பொதுவாக தலைப்பையே முடிவு செய்வார்கள். ஒரு கணநேரத்தில் அந்த தலைப்பில் பேச தயாராகிவிடுவார் சுவாமிஜி. எந்த தயக்கமும் இல்லாமல்,மடை திறந்த வெள்ளம் போல் கருத்துக்கள் வெளிவரும். யாரையும் திகைப்பில் ஆழ்த்திவிடக் கூடியது இது.
--
---தொடரும்...
-
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:
Post a Comment