Sunday, 4 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-15

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-15
---
கேள்வி...கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எங்கே சென்று பார்ப்பது?
--
சுவாமிஜி...கடவுள் வெளியே எங்கோ இருப்பதாக நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கடவுளைத் தேடும்படியும் உணரும்படியும் உங்களைத் தூண்டுவது, உங்களுக்கு உள்ளே இருக்கும் கடவுள்தான் .
-
கோயில்களிலும் சர்ச்சுகளிலும் மண்ணிலும் விண்ணிலும் மற்றெல்லா இடங்களிலும் பல காலமாகக் கடவுளைத் தேடிவிட்டு, ஆரம்பித்த இடத்திற்கே அதாவது உங்கள் ஆன்மாவிற்கே கடைசியில் வந்து சேருகிறீர்கள். இந்த ஆன்மாவைத் தான் நீங்கள் உலகமெல்லாம் தேடினீர்கள். இந்த ஆன்மாவை உணர்வதற்காகத்தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் அழுதீர்கள். பிரார்த்தனை செய்தீர்கள். இந்த ஆன்மாவைத்தான் மேகங்களுக்குமேல் மறைந்திருக்கும் மர்மங்களுக்குள் மர்மம் என்று நினைத்தீர்கள்.
-
இந்த ஆன்மா உங்கள் உயிருக்கு உயிராக, அருகிலுள்ள அனைத்திலும் மிக அருகில் இருக்கிறது. உங்கள் உடல், பொருள், ஆவி இவற்றின் உண்மையான உருவம் இந்த ஆன்மாதான். இதுதான் உங்கள் உண்மையான இயல்பு. இதை உறுதிப்படுத்துங்கள், வெளிப்படுத்துங்கள்
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்202

No comments:

Post a Comment