இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-3
(சுவாமி விவேகானந்தர்)
-
நாம் பிறந்த இந்து மதத்தின் பொது அடிப்படைகளைப் பார்ப்போம்.
-
2.புராணங்கள் மற்றும் ஸ்மிருதிகள்
-
பாமரமக்கள் புரிந்துகொள்வதற்காக புராணங்கள் எழுதப்பட்டன. சாதாரண மனிதன் முதல் அரசன் வரை உள்ள அனைவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை பற்றி கூறுபவை ஸ்மிருதிகள்.
-
வேதங்கள் எஜமானன் என்றால் புராணங்கள் மற்றும் ஸ்மிருதிகள் வேலைக்காரர்கள் போன்றது. ஸ்மிருதிகள், புராணங்கள்,தத்திர சாஸ்திரம் போன்றவை வேதத்துடன் ஒத்துப்போகும் வரைதான் ஏற்கத்தக்கவை, எங்கெல்லாம் வேதங்களிலிருந்து மாறுபடுகிறதோ, அவற்றை நம்பத்தகுந்தவையல்ல என்று ஒதுக்கிவிட வேண்டும். ஆனால் தற்காலத்தில் வேதங்களைவிட புராணங்களையே உயர்ந்த பீடத்தில் வைத்துள்ளோம். வேதங்களைப்படிப்பது தற்காலத்தில் மறைந்துவிட்டது போல தோன்றுகிறது.
-
வேதங்களுடன் ஒத்துப்போகாத பகுதிகள்புராணங்களில் இருந்தால் புராணத்தின் அந்த கருத்தை ஒதுக்கிவிடவேண்டும். உதாரணமாக மனிதன் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தான் என்று சில புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் வேதங்கள் மனிதனின் ஆயுள் நூறுவருடம் என்று குறிப்பிடுகிறது.
-
புராணங்களில் பக்தி கருத்துக்கள்,ஞானம்,கர்மம் போன்ற பல அறிவுரைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இனி நமது மதத்தின் தத்துவங்களை பற்றி சிறிது பார்ப்போம்....
-
---தொடரும்--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்5பக்கம்428
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment