வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-18
---
கிம் நாம ரோதிஷி ஸகே ந ஜரா ந ம்ருத்யு....(அவதூத கீதை 3.34)
-
"நண்பா, நீ ஏன் அழுது புலம்புகிறாய்? உனக்குப் பிறப்போ இறப்போ இல்லை. நீ ஏன் அழ வேண்டும்? உனக்கு நோயோ துன்பமோ கிடையாது. நீ எல்லையற்ற ஆகாயம் போன்றவன் பல வண்ண மேகங்கள் அதன்மீது வருகின்றன. கணநேரம் உலவிவிட்டு மறைந்து விடுகின்றன. ஆனால் ஆகாயம் எப்பொழுதும் மாறாத, மாசற்ற நீல நிறமாகவே இருக்கிறது. "
-
இப்படிப்பட்ட உறுதியான எண்ணங்களுக்கே உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இடமே கொடுக்காதீர்கள்.
-
நானே பரம்பொருள், நானே பரம்பொருள் என்று உங்கள் மனத்திற்கு எப்போதும் சொல்லுங்கள். இரவுபகலாக உங்கள் மனத்தில் அந்த எண்ணம் ஒரு பாடலாக ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.மரணத்தின் தறுவாயில் கூட, நானே பரம்பொருள் என்று முழங்குங்கள் அதுதான் உண்மை.
-
உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். உண்மையை அறியுங்கள். உண்மையையே கடைப்பிடியுங்கள். குறிக்கோள், தூரத்தில் இருக்கலாம். ஆனால் விழித்திருங்கள். எழுந்திருங்கள் லட்சியத்தை அடையும்வரை நிற்காதீர்கள்
---
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்209

No comments:
Post a Comment