Monday, 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-1


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-1
(சுவாமி விவேகானந்தர்)
-
இந்து 
-
நமது மக்களையும் நமது மதத்தையும் குறிப்பதற்கு சாதாரணமாக ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது - இந்து.
-
நான் வேதாந்தம் என்று எதைக் கூறுகிறேனோ அதைப் புரிந்துகொள்வதற்கு, இந்து என்ற சொல்லைச் சற்று விளக்க வேண்டியுள்ளது.
-
பழங்கால பாரசீகர்கள் ஸிந்து நதியை ஹிந்து நதி என்று அழைத்தார்கள். சம்ஸ்கிருதத்தின் ஸ என்ற சப்தம் பழங்கால பாரசீகத்தில் ஹ என்று மாறிற்று. எனவே ஸிந்து ஹிந்து வாயிற்று. கிரோக்கர்களுக்கு ஹ வை உச்சரிப்பது கஷ்டமாயிருந்தது. ஆதலால் ஹ வையும்அவர்கள் விட்டுவிட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எனவே இந்தியர்களானோம். சிந்து நதிக்கு மறுகரையில் வாழ்பவர்கள் ஹிந்து என்று அழைக்கப்பட்டனர்.
-
பல்வேறு நெறிகள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு சடங்குகள் ,பல்வேறு வழிபாட்டு முறைகள் இவற்றின் ஒரு தொகுப்புபோல் உள்ளது நமது மதம் ஒரு தனித் தலைமை இல்லை ஒரு தனி பெயரில்லை, ஒரு தனி அமைப்பு எதுவும் இல்லை . நமது மதப் பிரிவுகள் எல்லாம் ஒப்புக் கொள்ளும் விஷயம் ஒரு வேளை இது ஒன்றுதான் சாஸ்திரங்களாகிய வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். வேதங்களை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்து என்று அழைக்கின்ற உரிமை ஒருவேளை இல்லை என்பது நிச்சயம்.
--
---தொடரும்--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்5பக்கம்.191
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment