Sunday 4 December 2016

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்? பகுதி-3

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்? பகுதி-3
-
மேலை நாடுகளுக்குச் சென்று,நமது ஆன்மீக பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் அங்கே அறியச்செய்தபோது இந்தியர்களின் ஆழ்மனத்தை சுவாமிஜி தட்டி எழுப்பினார்.நீங்கள் அடிமைகள்,நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,உங்களுக்கு எந்த பாரம்பரியமும் இல்லை,எல்லாம் நாங்கள் வந்தபிறகே உங்களுக்கு தந்தோம்.எனவே நீங்கள் எங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யுங்கள் என்று வெள்ளையர்கள் கூறியதைக்கேட்டு இந்தியர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலம் அது.
-
நாங்கள் எதற்கும் உதவாதவர்கள்,எங்கள் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் கற்பனைகள் என்றே படித்த இளைஞர்கள் நினைத்தார்கள்.
-
இந்தியாவின் பெருமையை,அதன் ஆன்மீப் பாரம்பரியத்தை சுவாமிஜி மேலை நாடுகளில் எடுத்துக் கூறியபோது வியப்பில் ஆழ்ந்தது மேலைநாடு மட்டுமல்ல,இந்தியாவும் தான்.
நாம் உண்மையிலேயே இவ்வளவு பெருமைவாய்ந்தவர்களா?உலகிற்கே ஆன்மீகத்தை போதிக்கும் குருவாக விளக்க நம்மிடம் தகுதி இருக்கிறதா?நமது மத்தில் ஆழ்ந்த விஞ்ஞானம் இருக்கிறதா?நமது மதம் உலகத்திலேயே இவ்வளவு பெருமை வாய்ந்ததா?என்று இந்தியர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்.
-
சுவாமிஜி மட்டும் இல்லாதிருந்தால்,இந்தியாவில் இந்துமதம் இருந்திருக்காது.அது மட்டுமல்ல இந்தியாவையே இணைத்து வந்த இந்துமதம் இல்லாமல் போனால் இந்தியாவே இருந்திருக்காது.நாம் பல்வேறு சிறுசிறு நாடுகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருப்போம்.
--
--விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment