Sunday, 4 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-14

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-14
---
கேள்வி...எதிர்காலத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மதம் எது? அது எப்படிப்பட்டதாக இருக்கும்?
-
சுவாமிஜி.
..1.மதத்தைப் பற்றிய குறுகிய, எல்லைக்கு உட்பட்ட,விவாதத்திற்குரிய கருத்துக்களை விட்டுவிட வேண்டும்
2.இனம்,நாடு முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட மதக்கருத்துக்களை நாம் கைவிட வேண்டும்
3.ஒவ்வொர் இனமும் தனக்கென ஒரு தனிக்கடவுளை அமைத்துக்கொண்டு,மற்றவர்களின் கடவுள் தவறு,அவர்களது வழிபாடு தவறு என்று நினைக்கும் கடந்தகால மூடநம்பிக்கையை விட்டுவிட வேண்டும்.
4.உலகின் எதிர்கால மதம் ,உலகம் முழுவதையும் தழுவுவதாக இருக்க வேண்டும்.அதே போல எதிர்காலத்தில் எல்லையற்ற அளவு வளர்வதற்கான இடமும் அதில் இருக்க வேண்டும்.
5.ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையதாக மதம் இருக்க வேண்டும்.கடவுளைப்பற்றிய தங்கள் லட்சியங்கள் வேறுபட்டிப்பதற்காக ஒன்றை ஒன்று வெறுப்புடன் பார்க்கக்கூடாது.
6.இதற்கு முன்பு மதம் ,கோவில்களிலும்,சர்ச்சுகளிலும், புத்தகங்களிலும், உருவங்களிலும், சடங்குகளிலும்,விழாக்களிலும் மட்டுமே அடங்கியிருந்தது.ஆனால் இனிவரும் காலத்தில் ஆன்மீக மயமாக, உலகம் தழுவியதாக மாறவேண்டும்.
7.இதுவரை இல்லாதததை விட நன்மை செய்வதற்கு எல்லையற்ற ஆற்றல் உடையதாக இருக்க வேண்டும்.
8. நவீன விஞ்ஞான கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டும்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்185

No comments:

Post a Comment