Monday, 19 December 2016

இந்துமதம்-2

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதம் இந்துமதம் .இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைச் சமயங்கள் உண்டாயின. அவை வேதநெறியின் அடித்தளத்தை உலுக்கி விடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டடால், எப்படிக்கடல் சிறிது பின்னோக்கி சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்து கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளைச் சமயங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்ச் சமயத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
-
அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல் உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக்கதைகள் கொண்ட மிகச்சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பவுத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திகவாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்று சேரும் பொது மையம் எங்கே இருக்கிறது. ஒன்று சேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது. இந்த கேள்விக்கு தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.
அருள்வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் சமயத்தை பெற்றுள்ளனர். வேதங்களுக்கு துவக்கமும், முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்கு துவக்கமும், முடிவும் இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்கு தோன்றும், ஆனால் வேதம் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால் வெவ் வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள்,
---
-
சுவாமி விவோகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பு வரை.அமெரிக்காவில் இந்துக்கள் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிகக்கேவலமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.இந்துக்கள் காட்டுமிராண்டிகள்,அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்,இந்துமதம் பண்பாடற்ற காட்டுவாசிகளின் மதம் என்றே போதிக்கப்ட்டது.அது மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளின் பாடத்திலும் இது சேர்க்கப்பட்டிருந்தது. சுவாமிஜியிடம் பலமுறை இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
--
கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:
--
கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்? கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது
அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? …. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது …
----
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்.ஆகவே எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
----
வேதத்தின் மீது அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தான் வேதம் படிக்க வேண்டும் என்று எந்த வேதங்களிலும் இல்லை.
----
நாம் இனத்தால், மொழியால், ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நமது மதமாகும். அது தான் நமது பொதுவான அடித்தளம்.
---

No comments:

Post a Comment