சுவாமி விவேகானந்தர் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி-பாகம்-3
-
நிரூபர்..அமெரிக்காவில் நீங்கள் புதிய மதத்தையோ,புதிய பிரிவையோ நிறுவில்லையாமோ?இது உண்மையா?
-
சுவாமி விவேகானந்தர்..ஆம்.இவற்றையெல்லாம் அதிகரித்துக்கொண்டே போவது எங்கள் கொள்கைகளுக்கு நேர்மாறானது. மதங்களுக்கும் பிரிவினைகளுக்கும் பஞ்சம் இல்லை.
-
நிரூபர்..உங்கள் போதனை மதஒப்புமையா?
-
சுவாமி விவேகானந்தர்...எல்லா மதங்களிலிருந்தும் சக்கையையும் குப்பையும் அகற்றி, சாரத்தை திரட்டுவதே எனது கருத்து. முற்றும் துறந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடன் நான்.அவருடைய ஆற்றலும் கருத்துக்களுமே என்னை ஆட்கொண்டிருக்கின்றன.அவர் பிற மதங்களை குறைகூறவில்லை. அவற்றிலுள்ள குணங்களைகூறி, அவற்றை வாழ்வில் எப்படி பின்பற்றலாம் என்பதையே அறிவுறுத்தினார். பிற மதங்களை பகையை உணர்வுடன் பார்ப்பது அவரது போதனைக்கு முரணானது. உலகம் அன்பாலேயே இயங்குகிறது என்ற உண்மையைின் மீதே அவரது போதனை அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்துமதம் மதவெறிகொண்டு பிற மதத்தினரை விரட்டியது இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாமதத்தினரோடும் அமைதியாக சேர்ந்து வாழும் நாடு இந்தியா. கொலையும் உயிர்வதையும் முகமதியர்களுடன் வந்தவை. அவர்கள் இந்தியாவுக்குள் வரும் வரையில் நாட்டில் அமைதியே நிலவியது.பொறுமை தான் பலம் என்பதற்கு இந்தியா சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
-
நிரூபர்..இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தனிமனிதர்கள் இதை பின்பற்றலாம். நாடுகள் செயல்படுத்தமுடியுமா?
-
சுவாமிஜி..முடியும். கட்டாயமாக முடியும். அடிக்கடி பிறநாட்டினரால் வெல்லப்படுவது இந்தியாவின் தலைவிதி. ஆனால் தன்னை வென்றவர்கள்மீது அது ஆணை செலுத்துகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் சூஃபி முஸ்லீம்களாக உள்ளார்கள். அவர்கள் இந்து கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.(வெல்ல வந்தவர்களை இந்துமதக்கருத்துக்கள் வெல்லும்)
இங்கிலாந்தும் இதேபோல் வெல்லப்படும். வேளை வரும்போது இந்தியாவில் இந்துமதத்தில் மறுமலர்ச்சி தோன்றும், அதன் தாக்கம் ஜரோப்பா முழுவதும் ஆட்சி செலுத்தும் என்று தத்துவஞானி ஷோபனேர் சொன்னது நினைவில் இல்லையா?
-
நிரூபர்..மன்னிக்கவும்.நீங்கள் சொல்வதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது தெரியவில்லையே?
-
சுவாமிஜி..தெரியாமல் இருக்கலாம்( சுவாமிஜி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்) இந்தியாவில் மறுமலர்ச்சி தோன்றியுள்ளதை பலர் அறியவில்லை.
-
சுவாமி விவேகானந்தர் லண்டனில் உள்ள சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு 1896 ம் ஆண்டு அளித்த பேட்டி
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்6.பக்கம்355
No comments:
Post a Comment