என் வீர இளைஞர்களுக்கு
-பகுதி-12
-
கோடனுகோடி மக்கள் பசியிலும் அறியாமையிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள், அவர்களுடைய செலவில் கல்வி பெற்றுக்கொண்டு, அவர்களுக்காக ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருக்கம் ஒவ்வொருவரையும் நான் துரோகி என்றே சொல்வேன். ஏழைகளைக் கசக்கி பிழிந்து பெற்ற செல்வத்தையெல்லாம் வைத்துக்கொண்டு, சொகுசாக உடுத்தி மினுக்காக உலவுகின்றனர். பசியால் வாடி வாழ்ந்துகொண்டிருக்கம் கோடனகோடி மக்களுக்கு எதுவும் செய்யாதவர்களை நான் பக்தர்கள் என்று சொல்லமாட்டேன். அவர்கள் வெறும் பதர்களே.
-
சகோதரர்களே,நாம் ஏழைகள்,நாம் வெறும் பூஜ்யங்கள்,ஆனால் அத்தகையோரே எப்போதும் இறைவனின் கருவிகளாக இருந்துவந்துள்ளனர். இறைவன் உங்கள் அனைவருக்கும் அருள்புரிவாராக...
--
சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்452
--
என் வீர இளைஞர்களுக்கு
-பகுதி-11
-
என் மகனே உறுதியாகப்பற்றி நில். உனக்கு உதவுவதற்காக யாரையும் லட்சியம் செய்ய வேண்டாம். மனித உதவிகள் அனைத்தையும்விட இறைவன் எல்லையற்ற மடங்கு பெரியவர் அல்லவா? புனிதனாக இரு, இறைவனிடம் நம்பிக்கை வைத்திரு. அவரையே எப்போதும் சார்ந்திரு- நீ சரியான பாதையில் போகிறாய். உன்னை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது.
-
நான் ஓர் ஏழை, ஏழைகளை நேசிக்கிறேன்.வறுமையிலும் அறியாமையிலும் நிரந்தரமாக அழுந்திக்கிடக்கின்ற கோடிக்கணக்கான இந்தியர்களுக்காக யார் உணர்ச்சிகொள்கிறார்கள்? அவர்களுக்கு ஒளியை யார் கொண்டுவந்து தருவது? இந்த மக்களே உங்கள் தெய்வங்கள் ஆகட்டும். இவர்களைப்பற்றி சிந்தனை செய்.இவர்களுக்காக வேலை செய். இவர்களுக்காக பிரார்த்தனை செய். இறைவன் உனக்கு வழிகாட்டுவார்
-
யாருடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே மகாத்மா என்பேன்,இல்லாவிட்டால் அவன் ஒரு துராத்மாவே. அவர்களின் நன்மைக்காக நமது சங்கல்பத்தை ஒன்றிணைப்போம்.
---
-சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்450
--
என் வீர இளைஞர்களுக்கு
-பகுதி-10
-
நாட்டின் நாடி நரம்புகளில் புதிய உத்வேகத்தை எழுப்பக் கூடிய ஒரு புதிய மின் ஆற்றலே இந்தியாவிற்கு இப்போது தேவை. இத்தகைய ஒரு பணி அன்றும் சரி, இன்றும் சரி என்றும் மெதுவாகவே நடைபெறும். வேலை செய்வதுடன் திருப்திகொள்.அனைத்திற்கும் மேலாக உங்களிளுக்கு நீங்களே உண்மையாக இருக்க வேண்டும் .முழுக்க முழுக்க தூய்மையாகவும்,உறுதியாக,மனப்பூர்வமாக இருங்கள்.
இறைவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. முட்டாள்கள் உளறிக்கொண்டிருக்கட்டும். நாம் அவர்களது உதவியை நாடுவதும் இல்லை,புறக்கணிப்பதும் இல்லை-மகோன்னதமான இறைவனின் சேவகர்கள் அல்லவா நாம்? அற்ப மனிதர்களின் சிறு முயற்சிகள் நம் கவனத்தையே கவரக் கூடாது. முன்னேறிப்போங்கள்
--
--சுவாமி விவேகானந்தர்

-பகுதி-9
-
பிரபஞ்ச அளவுக்கு உங்கள் இதயத்தையும் நம்பிக்கையையும் விரிவுபடுத்துங்கள்.வேதாந்த விளக்கவுரைகளைப் படியுங்கள். தயாராக இருங்கள், ஏனெனில் எதிர்காலத்திற்காக நான் பல திட்டங்களை வைத்துள்ளேன். மக்களை கவரவல்ல சொற்பொழிவாளர்கள் ஆக முயற்சிசெய்யுங்கள்.மக்களை துடிப்புடன் எழச்செய்யுங்கள்.நம்பிக்கை இருக்குமானால் எல்லாம் உங்களை வந்துசேரும்.
யாருடனும் சண்டையிடாதீர்கள்,யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். அவனோ இவனோ கிறிஸ்தவனாகிவிட்டால் நாம் ஏன் அதைப்பொருட்படுத்த வேண்டும்? எந்த மதம் பொருத்தமாக உள்ளதோ அதை அவர்கள் பின்பற்றட்டும். வாதங்களில் ஏன் கலந்துகொள்கிறாய்? பல்வேறு மனிதர்களின் பல்வேறு கருத்துக்களைச்சகித்துக்கொள். பொறுமை,விடாமுயற்சி, தூய்மை-இவை உறுதியாக வெற்றி பெறும்.

complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்458
--
என்வீர இளைஞர்களுக்கு
-பகுதி-8
--
நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால் எதற்குமே அஞ்சமாட்டீர்கள். எதற்காகவும் நிற்க மாட்டீர்கள். சிஙகஙகளெனத் திகழ்வீர்கள். நாம் இந்தியாவையும் உலகம் முழுவதையும் விழித்தெழச்செய்ய வேண்டும். கோழைத்தனம் உதவாது. முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. புரிகிறதா?உயிரே போவதானாலும் உண்மையைப் பற்றி நில்லுங்கள்.
நான் காட்டுகின்ற வழியில் செல்லுங்கள். வெற்றி நிச்சயம். இதன் ரகசியம் குருபக்தி. மரணமே வந்தாலும் குருவிடம் நம்பிக்கை தளரக்கூடாது. அந்த நம்பிக்கை உன்னிடம் உள்ளதா? உள்ளது என்று நம்புகிறேன்.
--
சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்457

-பகுதி-7
--
வேதாந்த கருத்துக்களை கற்று தேர்ந்த,ஆயிரக்கணக்கான ஆண்களும்,ஆயிரக்கணக்கான பெண்களும் காட்டுத்தீயைப்போல் இமயத்திலிருந்து குமரிமுனைவரையிலும்,உலகம் முழுவதிலும் பரவவேண்டும். இது குழந்தை விளையாட்டல்,அதற்கு நேரமும் இல்லை. குழந்தை விளையாட்டிற்காக வந்திருப்பவர்கள் விரைவில் வெளியேறட்டும்,இல்லாவிட்டால் அவர்களுக்கு பேராபத்து நிகழ்வது உறுதி. ஓர் அமைப்பு வேண்டும்.சோம்பல் ஒழியட்டும். பரவுங்கள்,பரவுங்கள்,காட்டுத்தீ போல் எங்கும் பரவுங்கள்.
-
சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்476

No comments:
Post a Comment