Sunday, 4 December 2016

கடைசி நாட்கள். பாகம்-7

சுவாமி விவேகானந்தரின் கடைசி நாட்கள். பாகம்-7
--
1902 ஜுலை 1. சுவாமிஜி பிரேமானந்தருடன் மாலை வேளையில் கங்கைக்கரையில் நடந்துகொண்டிருந்தார். திடீரென பிரேமானந்தரை அழைத்து கங்கைக்கரையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார். பிறகு அமைதியாக கூறினார்.“நான் உடம்பை விட்டபிறகு உடலை அந்த இடத்தில் எரியுங்கள்”!
-
ஜுலை 2.ஏகாதசி அன்று சுவாமிஜி விரதம் இருந்தார். ஆனால் அன்று காலையில் அங்கே சென்ற நிவேதிதைக்கு எல்லா உணவு வகைகளையும் பரிமாறி அவரைச் சாப்பிடச் செய்தார். நிவேதிதை சாப்பிட்டபோது அருகில் அமர்ந்து வேடிக்கையாக பேசினார். சாப்பிட்டு முடித்ததும் நிவேதிதாவின் கை கழுவ சுவாமிஜி நீர் வார்த்தார். கைகளை துண்டால் துடைத்தும் விட்டார்.
-
நிவேதிதா..”சுவாமிஜி, இதைல்லாம் நான் அல்லவா உங்களுக்குச் செய்ய வேண்டும்‘ நீங்கள் எனக்குச் செய்வதா?
-
சுவாமிஜி..ஏன் ஏசுநாதர் தம் சீடர்களுக்கு கால்களையே கழுவினாரே!
-
ஆனால்..அது..அவரது கடைசி நாளாயிற்றே! என்று சொல்ல வேண்டும் என நிவேதிதா நினைத்தார்..ஆனால் சொல்லவில்லை.
-
ஜுலை4, வெள்ளி. சுவாமிஜி குறித்துவைத்திருந்த தனது கடைசி நாளும் வந்தது...
-
காலையில் வழக்கம்போல 3 மணிக்கு எழுந்தார். பின்னர் தேனீர் வேளையில் சகோதர துறவிகளுடன் தங்கள் பழைய நாட்களைப்பற்றி பேசி ஆனந்தம் அடைந்தார்.
-
சுவாமிஜி காலை 8.30 மணிக்கு ராமகிருஷ்ணரின் கோவிலில் பூஜையறைக்கு சென்றார்.அங்கே தியானத்தில் ஆழ்ந்தார்.9.30 மணிக்கு பிரேமானந்தர் அங்கு வந்தார், அவரிடம் பூஜையறையின் அனைத்து ஜன்னல்கள் கதவுகளை மூடச்சொன்னார்.. அப்போது அங்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? நீங்கள் எனக்கு கொடுத்த வேலைகளை முடித்துவிட்டேன் ,இனி எனக்குவிடைகொடுங்கள் என்று குருதேவரிடம் சொல்லியிருக்கலாம்.காலை 11 மணிவரை தியானத்தில் இருந்தார்.
-
கதவுகளைத்திறந்து வெளியே வந்த சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.காளியின் மீது ஓர் அழகிய பாடலை பாடியவாறே படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தார்.
-
அப்போது அவருக்கு முற்றிலும் இந்த உலக நினைவே இல்லை. கீழே நின்றுகொண்டிருந்த யாரையும் அவர் கவனிக்கவில்லை.
-
அதன்பிறகு சுவாமிஜி, சுத்தானந்தரிடம் நூல்நிலையத்திலிருந்து சுக்ல யஜுர்வேத சம்ஹிதையைக் கொண்டு வந்ததும் அதிலிருந்து, ஸுஷும்ண,ஸுர்ய ரச்மி..என்று தொடங்குகின்ற பகுதியை படிக்கச்சொன்னார்.
-
மதிய உணவை அனைவருடனும் நேர்ந்து உண்டார். சாப்பிடும்போது வேடிக்கை வினோதங்கள் பேசி அனைவரையும் மகிழச்செய்தார்.
அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டார்,மடத்தில் உள்ளபிரம்மச்சாரிகளை அழைத்து தொடர்ந்து மூன்று மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கண பாடம் நடத்தினார். அதையும் வேடிக்கை வினோதங்கள்,கதைகள் மூலம் நடத்தினார்.
-
மாலை 4 மணி,இளம் சூடான பாலும்,தண்ணீரும் சாப்பிட்டார்.பிறகு பிரேமானந்தருடன் சுமார் 1 மைல் தூரம் உள்ள பேலூர் கடைத்தெரு இருந்த திசையை நோக்கி நடந்து சென்றார்கள்
வேதக்கல்லூரி ஒன்றை நிறுவவேண்டும் என்று சுவாமிஜி கூறினார்.
வேதங்களை படிப்பதால் என்ன நன்மை என்று பிரேமானந்தர் கேட்டார்.
மூடநம்பிக்கை ஒளியும் என்று சுவாமிஜி பதிலளித்தார்
-
மாலை 5.30 மணிக்கு இருவரும் மடத்திற்கு திரும்பினார்கள்.மாலையில் கோவிலில் ஆரத்திக்காக மணியடிக்கப்பட்டது. பிரேமானந்தர் பூஜை செய்வதற்காக பூஜையறைக்குச் சென்றார்.
--
-தொடரும்---
-
---விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment