Sunday, 4 December 2016

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்? பாகம்-2

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்? பாகம்-2
---
1.இன்றைய இந்துமதம் சுவாமி விவேகானந்தரின் படைப்பு.துண்டு துண்டாக பிரிந்தும் முரண்பட்டும் கிடந்த பல்வேறு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து இன்றைய இந்து மதத்தை அவர் தந்துள்ளார்.பண்டைய சாஸ்திரங்களையும் கருத்துக்களையும் இன்றைய சிந்தனைப் போக்கில் அவர் நமக்கு வார்த்து அளித்தார்.
-
2.துறவியரை சமுதய சேவையில் ஈடுபடச்செய்து இந்துத்துறவு நெறிக்கு ஒரு புதிய,நவீன பரிமாணத்தை அளித்தார்
-
3.முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுவாமி விவேகானந்தருக்கு உண்டு.ஏழைகளுக்காக அழுத முதல் தீர்க்கதரிசி அவர். ஏழைகளுக்காக பேசிய முதல் இறையுணர்வாளர் அவர். நாடு குடிசையில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.ஆனால் அந்தோ!அவர்களுக்காக யாரும் எதையும் எப்போதும் செய்ததில்லை என்று கூறினார்.
-
4.இந்தியாவை முன்னேற்ற சமுதாயசீர்திருத்தம் தான் ஒரே வழி என்று நினைத்திருந்த காலத்தில்,இந்தியாவின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களை புறக்கணித்ததே காரணம் என்று முழங்கிய முதல் மனிதர் அவர்.
-
5.இந்தியா முழுவதும் யாத்திரை சென்றதன் விளைவாக ஏழைகளை முன்னேற்றுவதற்கு,அவர்களை விழிப்புறச்செய்வதற்கு பரந்த கல்வித்திட்டத்தை வகுத்தார்.அதற்காக பணம் பெற வெளிநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.(ஆனால் அவரது காலத்தில் இது நடக்கவில்லை,வெளிநாட்டினர் இந்திய ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை)
-
6.ராமகிருஷ்ணமிஷன் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம்,ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்தார்
-
7.மக்களுக்கு செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு என்ற சேவை-தர்மத்தை உருவாக்கினார்.மக்களுக்கு தொண்டாற்றுவதன் மூலம் இறைநிலையை அடைய முடியும் என்று போதித்தார்.
-
8.கடல் கடந்து சென்று இந்து மதத்தை பரப்ப கூடாது என்ற விதியை உடைத்து,இந்து மதத்தை அனைத்து நாடுகளிலும் சென்று பரப்பினார்.வெளிறாட்டினர் இதன் மூலம் இந்து மதமே ,தத்துவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உயர்ந்த சமயம் என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
--
---விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment