என்வீர இளைஞர்களுக்கு
-பகுதி-6
--
இந்த மணி,சாமரம் போன்ற(வழிபாடுகளை) எல்லாவற்றையும் கங்கையில் எறிந்துவிட்டு, வாழும் கடவுளை, மனித உருவில் காண்கின்ற கடவுளை வழிபடுங்கள். மனித உருவிலுள்ள ஒவ்வொருவரும் எங்கும் நிறைந்த அதே இறைவனே. எங்கும் நிறைந்த கடவுளை வழிபடுவது என்றால் இவர்களுக்கு சேவை செய்வது என்று பொருள்.
-
காசியிலும்,பிருந்தாவனத்திலும் கோவில் கதவுகளை மூடுவதற்கும் திறப்பதற்கும் லட்சக்கணக்கில் ரூபாய்கள் செலவாகிவிட்டன.(இறைவனுக்கு உணவு படைக்கம் போது கதவை மூடுவார்கள்.பிறகு திறப்பார்கள்)இப்போது பிரபு நீராடுகிறார்!,இப்போது பிரபு உணவு அருந்துகிறார்!.வேறு என்ன என்ன செய்வாரோ தெரியவில்லை!.
-
பம்பாயில் மனித உருவில் வாழும் தெய்வங்கள் உணவு இன்றி சாகிறார்கள்.
உங்களுள் யாரெல்லாம் சற்று மூளை உள்ளவர்களோ,அவர்களின் பாதங்களில் நான் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன்.-தீப்பொறியாக பரவுங்கள். எங்கும் நிறைந்த இந்த கடவுளின் இந்த வழிபாட்டை பிரச்சாரம் செய்யுங்கள்.இது நமது நாட்டில் இதுவரை பிரச்சாரம் செய்ப்படவில்லை. கிராமம் கிராமமாக சென்று,வீடுவீடாக சென்று இந்த கருத்துக்களைப் பரப்புங்கள்.
--
சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்472

ன்வீர இளைஞர்களுக்கு
-பகுதி-5
--
எனது மாபெரும் திட்டம் இது தான். சங்கம் ஒன்றை அமைத்து,இந்தியா முழுவதிலும் கிளைகளை ஏற்படுத்திக்கொண்டே செல்.மத அடிப்படையிலேயே இப்போது தொடங்கு,அதிரடியான சமூதாய சீர்திருத்தம் இப்போது வேண்டாம். அதே வேளையில் முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை ஆதரிக்கவும் வேண்டாம்.எல்லோருக்கும் முக்தி உண்டு,எல்லோரும் சமம் என்று கூறி,சமுதாயத்தை புதுப்பிக்க முயற்சி செய். அத்துடன் பஜனை முதலியவையும் நடக்கட்டும். கொடி முதலியவற்றுடன்,தெரு பஜனை, தெரு சொற்பொழிவு போன்றவை நடைபெற வேண்டும்.வாரந்தோறும் ஒரு முறையாவது சங்கத்தின் கூட்டம் நடைபெற வேண்டும்.
உன்னில் ஊக்கத் தீ பரவட்டும், பிறகு எல்லா இடத்திலும் பரப்பு. வேலை செய். வேலை செய். வேழி நடத்தும் போது ஒரு பணியாளனைப்போல இரு. சுயநலம் அற்றவனாக இரு. ஒரு நண்பன் இன்னொரு நண்பனை தனிமையில் திட்டுவதை கேட்காதே. எல்லையற்ற பொறுமையுடன் இரு. உனக்கு வெற்றி நிச்சயம்.
--
சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்409

-பகுதி-4
--
இந்தியாவை உயர்ந்த வேண்டும்.ஏழைகளுக்கு உணவு தரவேண்டும்,கல்வியைப்பரப்ப வேண்டும்,புரோகிதக் கொடுமையை அகற்ற வேண்டும்,சமுதாய கொடுமை வேண்டாம்.பிறருக்கு சுதந்திரம் அளிக்க தயாராக இல்லாதவனுக்கு சுதந்திரம் பெற தகுதி கிடையாது.இந்து மதத்திலிருந்து புரோகிதக்கொடுமையை தூக்கி எறியுங்கள்,எஞ்சுகின்ற மதம் உலகின் மிகச்சிறந்த மதமாக இருக்கும். நான் சொல்வது புரிகிறதா? இந்தியாவின் மதத்தை கொண்ட ஒரு ஜரோப்பிய சமுதாயம் ஒன்றை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும்.(இந்து மதத்தின் ஆன்மீகமும்,ஜரோப்பாவின் விஞ்ஞானமும் ஒன்று கலந்த ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்)
---

-பகுதி-3
--
போலித்தனம் கூடாது, பொய் கூடாது,போக்கிரித்தனம் கூடாது-இதுவே நான் விரும்புவது. நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்.பகவில் விரகாசம்போல பரந்து விரிந்து நிற்கின்ற சத்தியத்தையே நம்பியிருக்கிறேன். பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ,ஏன் பொது நன்மைக்காகவோ கூட போலியாக வாழ்ந்தேன் என்ற கறைகொண்ட மனசாட்சியுடன் இறக்கவிரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக்கூடாது.செயல்முறைக் கொள்கையில் மாசின் நிழல்கூடப் படியக் கூடாது.
--
--
சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்9.பக்கம்411

-பகுதி-2
--
சலனபுத்தி வேண்டாம்,ரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம்,இருட்டில் செய்கின்ற எதுவும் வேண்டாம்,“குரு என்னிடம் தனிப்பட்ட முறையில் பிரியமாக உள்ளார்”என்ற பேச்சு வேண்டாம். என் வீரக்குழந்தைகளே முன்னேறுங்கள்,பணம் இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி,மனிதன் இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி, முன்னேறிச்செல்லுங்கள்.உங்களிடம் அன்பு இருக்கிறதா இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா இல்லையா?அது போதும். முன்னேறிச்செல்லுங்கள்,தொடர்ந்து முன்னேறுங்கள்,எதுவுமே உங்களை எதிர்த்து நிற்க முடியாது.

-பகுதி-1
--
கவனமாக இருங்கள்.உண்மைக்குப்புறம்பான அனைத்தின் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள்.உண்மையை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்.நாம் வெற்றி பெறுவோம்,அது மெதுவாக இருக்கலாம்.ஆனால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.ஐயாயிரம் ஆண்டுகள் உங்கள்மீது கண்வைத்து கவனித்து வருகிறது,இந்தியாவின் எதிர்காலம் உங்களையே சார்ந்துள்ளது.வேலை செய்துகொண்டே போங்கள்.

No comments:
Post a Comment