Sunday, 4 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்--பகுதி-9

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்--பகுதி-9
---
சீடர்..பிரம்மச்சர்யம் இல்லாமல் இறையனுபூதி கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இந்த காலத்தில் இது சாத்தியமா?அப்படியானால் எங்களைபோன்ற சாதாரண மனிதர்கள் கதி என்ன?
--
சுவாமிஜி..உடம்பும் மனமும்,பூரண புனிதம் பெற்றால் தான் இறைவன் யாரென்று உணரமுடியும். துறவிகள் முழுமையான பிரம்மச்சர்ய வாழ்க்கை வாழவேண்டும்.அது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும்.இல்லறத்தார்கள் முடிந்தவரை கட்டுப்பாடான வாழ்க்கை வாழவேண்டும். கட்டுப்பாடான வாழ்க்கையிலிருந்து விழிப்புணர்வு ஆற்றல் உண்டாகிறது.
--
சீடர்..பிரம்மச்சர்யம் நோக்கம் என்றால் திருமணம் செய்யாமலே வாழ்வது நல்லதல்லவா?
--
சுவாமிஜி..மனிதனின் சம்ஸ்காரங்கள்(முற்பிறவி,இந்தபிறவி இவற்றின் பல்வேறு அனுபவங்களின் தொகுப்பு) ஆற்றல் மிக்கவையாக உள்ளன்.அவற்றின் வேகம் காரணமாக ஒருவன் திருமணம் செய்துகொள்வதற்கு தூண்டப்படுகிறான்.அந்த சம்ஸ்காரங்களிலிருந்து சிறிதளவாவது விடுபட்டால் துறவுக்கு தகுதியுடையவனாகிறான்.ஆனால் பலருக்கு துறவு சாத்தியமில்லை,அதனால் திருமணம் அவசியம். திருமணம் செய்துகொண்டால் பிரம்மச்சர்யம் காக்க முடியாது என்று நியதி இல்லை. திருமணம் செய்து கொண்ட பலர் பிரம்மச்சர்ய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். ஆனால் அவர்களைப்பற்றி சாதாரண மனிதர்களுக்கு தெரியாது.
--
சீடர்..துறவி ஒருவர் துறவுப்பாதையிலிருந்து விலகி நெறிதவறி விட்டால் அவரது கதி என்ன?
--
சுவாமிஜி..அவருக்கு இந்த பிறவி வீண்.அடுத்த பிறவியில் மீண்டும் முயன்று,முக்தியடைய முயற்சிப்பார்.குருவின் பாதுகாப்பு இருந்தால் துறவிகள் தவறான வழியில் செல்லும் முன் அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்.
--
சீடர்..சுவாமிஜி,அப்படியானால் நான் நெறி தவற நேர்ந்தால் நீங்கள் என்னை காப்பாற்றுவீர்களா?
--
சுவாமிஜி..நிச்சயமாக காப்பாற்றுவேன்,நீ நரகத்திற்கு சென்றாலும்,அங்கே வந்து உன்னை பிடித்து வந்துவிடுவேன்.
--
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம்2.பக்கம் 610
--
----விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment