Monday, 19 December 2016

விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-26

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-26
---
கிறிஸ்தவர் ஒருவரின் கேள்வி...உங்கள்மதம்(இந்துமதம்)மிகவும் பெருமை வாய்ந்தது என்று நீங்கள் சொல்வது உண்மையானால். அது தான் உண்மையான ஒரே மதம் என்றால்,உங்கள் நாடு நாகரீகத்தில் ஏன் முன்னேறவில்லை? உலகநாடுகளுள் அது ஏன் உயர்ந்ததாக ஆக வில்லை
-
சுவாமி விவேகானந்தர்...அதற்கு மதம் காரணமல்ல. உலகின் மிகவும் ஒழுக்கசீலர்கள் எங்கள் மக்களே, மற்ற இனத்தினருக்கு சமமாகவேனும் உள்ளவர்கள். அவர்கள் பிறருடைய(மற்றமதத்தவர்) உரிமையை காப்பதில் கருத்து உள்ளவர்கள். பிராணிகளின் உரிமையைக் கூட புறக்கணிப்பதில்லை. அவர்கள் உங்களை போன்ற உலகியல் சிந்தனை கொண்டவர்களல்ல. நீங்கள் பெருமையடித்துக்கொள்கின்ற கிறிஸ்தவ மதம், டார்வின்,மில், ஹ்யூம் போன்ற அறிஞர்களை ஆதரிக்கவில்லை. இந்த நிலையில் நீங்கள் எங்கள் மதத்தை ஏன் இகழவேண்டும்?
--
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்6.பக்கம்340

No comments:

Post a Comment