Monday, 19 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-14

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-14
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதங்கள் பற்றி பார்ப்போம்-3
-
வேதங்களின் கர்மகாண்ட பகுதியை பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்...
-
பழங்கால புரோகிதர்கள் வேதங்களின் பலத்தால் தேவர்களை அரியாசனத்திலிருந்து இறக்கிவிட்டு, அந்த இடங்களில் தாங்களே அமர்ந்தனர்.”சொற்களின் ஆற்றல் என்ன என்பது உங்களுக்குத் தெரியாது, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியும். நாங்களே உலகின் நடமாடும் தெய்வங்கள். எங்களுக்கு பணம் கொடுங்கள்,நாங்கள் வேத சொற்களை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டியதைக் கிடைக்கச்செய்வோம்.” இந்த சொற்களை நீங்கள் உச்சரிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் சிறு தவறு நேர்ந்தாலும் எதிரான பலனை உருவாக்கிவிரும்.
-
நீங்கள் செல்வந்தராக, அழகானவராக,நீண்ட ஆயுள் உள்ளவராக, நல்ல கணவரை அடைந்தவராக வேண்டுமா? புரோகிதர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு சும்மா இருக்க வேண்டியது தான்.
-
வேதத்தின் இந்த கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்கள் நோக்கம் மற்ற மதங்களின் நோக்கத்தை போலவே உள்ளது. அதாவது இந்த உலகிலும்,மறுஉலகிலும் இன்பம் அனுபவிப்பது, கணவன்,மனைவி,மக்கள் இவையே
-
பணத்தை புரோகிதருக்கு கொடுங்கள்.அவர்கள் சொர்க்கத்தில் உங்களுக்கு அனுமதி சீட்டு வாங்கித்தருவார்கள். நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று சந்தோசமாக வாழலாம், உங்கள் உற்றார் உறவினர்களை அங்கே காணலாம். அந்த சொர்க்கத்தில், கண்ணீர் இல்லை, அழுகை இல்லை, எவ்வளவு உண்டாலும் வயிற்று வலி வராது, எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். பல்வேறு கேளிக்கைகள் நடந்துகொண்டே இருக்கும், அவற்றை பார்த்துக்கொண்டே இருக்கலாம்,தலைவலியே வராது. இப்படிப்பட்ட சொர்க்கத்தில் ஆனந்தமாக நீண்டகாலம் வாழுங்கள்.இதுவே புரோகிதர்கள் கூறும் மனிதனின் குறிக்கோள்.
-
இன்னொரு கருத்தும் உண்டு. அதை கர்மநியதி என்கிறார்கள்.மனிதன் இயற்கைக்கு அடிமை.என்றும் அடிமையாகவே இருக்க வேண்டும். இந்த வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லை.அவன் எங்கு சென்றாலும் இந்த கர்மநியதியால் கட்டுப்படுத்தப்படுகிறான்.இந்த கர்மநியதி இல்லாத இடமே இல்லை. மனிதன் மறுபடி மறுபடி பிறந்து வாழ வேண்டும் அவனுக்கு இந்த இயற்கையிலிருந்து விடுதலையே கிடையாது.
-
மக்களுள் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை. சிறிது சிந்திக்கத் தொடங்கியதும், மூடநம்பிக்கைகளின் தொகுதி அவர்களைப்படுத்தும் பாடு பயங்கரமானது. அவர்களை ஆசைகாட்டியும், அச்சுறுத்தியுமே நகரவைக்க வேண்டியுள்ளது. அவர்களாக நகரவே மாட்டார்கள். அவர்களை மிரட்டவேண்டும், பயமுறுத்த வேண்டும்,திகிலடையச்செய்ய வேண்டும். அப்போது அவர்கள் என்றென்றைக்கும் உங்கள் அடிமைகளாகவே இருப்பார்கள்.
-
அவர்கள் பணம் கொடுக்க வேண்டும், கீழ்படியவேண்டும் ,எதிர்த்து கேள்விகேட்கள்கூடாது மற்ற அனைத்தையும் புரோகிதர்கள் கவனித்துக்கொள்வார்கள். மதம் எவ்வளவு எளிதாகிவிட்டது பாருங்கள்.
இவ்வாறு தான் கர்மகாண்டம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் நிலவி வந்தது.
-
இன்னொரு வழியும் உள்ளது. அது இதற்கு நேர் எதிரானது.....
--
தொடரும்....
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்7பக்கம்.84
-
--விவேகானந்தர் விஜயம்--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment