Tuesday, 13 December 2016

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-6-10

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-6
-
நமது சமுதாயங்களின் தலைவர்கள் ஒரு போதும் படைத்தலைவர்களே அரசர்களோ அல்ல, மாறாக ரிஷிகளே என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் ரிஷிகள் என்பவர் யார்? உபநிடதங்கள் ரிஷி என்று அழைக்கின்ற ஒருவர் சாதாரண மனிதர் அல்ல ; மந்த்ர த்ரஷ்டா;ஆன்மீகத்தை நேருக்கு நேர் காண்பவர்.
-
அவரைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பது வெறும் புத்தகப் படிபல்ல; கற்பனைகளே வாதங்களோ அல்ல; வெற்றுப் பேச்சும் அல்ல; மாறாக, புலன்களைக் கடந்த உண்மைகளை நேருக்கு நேர் காண்பது அதாவது உண்மை அனுபூதியே. இது தான் ரிஷித்தும் என்பது.
-
ரிஷித்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கோ காலத்திற்கோ நெறிக்கோ ஜாதிக்கோ சொந்தமானதல்ல
-
நமக்கு நம்பிக்கை வேண்டும்.நாம் அனைவரும் உலகத்தை அசைப்பவர்களாக மாறியாக வேண்டும், ஏனெனில் எல்லாம் நம்மிடமே உள்ளது. ஆன்மீகம் என்பதை நாம் நேருக்கு நேராகக் கண்டாக வேண்டும், அனுபவிக்க வேண்டும், அதன் மூலம் அது பற்றிய நமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் ரிஷித்துவமாகிய அந்தப்பேரொளியில் திளைக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் மகத்தானவர்களாக இருப்போம். அப்பொழுது நம் உதடுகளிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இணையற்ற பாதுகாப்பை அள்ளி வழங்குவதாக இருக்கும்.
-
அப்பொழுது யாரையும் நிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், யாரையும் திட்ட வேண்டிய தேவையே இல்லாமல், இந்த உலகத்தில் யாருடனும் சண்டையிடும் அவசியமும் இல்லாமல் நம் முன்னர் தீமைகள் தாமாகவே மறைந்து போகும்.
-
சொந்த முக்திக்காகவும் பிறரது முக்திக்காகவும் இங்குள்ள ஒவ்வொருவரும் அத்தகைய ரிஷித்துவத்தை அடைய கடவுள் நமக்கு உதவுவராக.
-
-
சுவாமி விவேகானந்தர் மதுரையில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---

-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-7
-
நமது புனிதமான தாய் திருநாடு ஆன்மீகமும் தத்துவமும் தழைத்த நாடு, ஆன்மீகச் செம்மல்களைப் பெற்ற நாடு, துறவின் உன்னத நாடு.
-
இங்கு, இங்கு மட்டுமே மிகப் பழங்காலத்திலிருந்து மிக நவீன காலம் வரை, வாழ்வின் மிகவுயர்ந்த லட்சியம் மனிதனுக்குக் காட்டப்பட்டுள்ளது.
-
மேலை நாடுகளில் நான் இருந்திருக்கிறேன், பல நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன், பல்வேறு இன மக்களுடன் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு நாடும் ஒவ்வோர் இனமும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தைப் பெற்றிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கை நீரோட்டம் முழுவதிலும் அந்த லட்சியம் பாய்ந்து பரவுகிறது, தேசியவாழ்க்கையின் முதுகெலும்பாக அமைந்து இருக்கிறது.
-
அரசியலோ, வாணிகத் தலைமையோ, தொழில் நுட்ப உயர்வோ, ராணுவ ஆற்றலோ இந்தியாவின் முதுகெலும்பாக இல்லை நாம் பெற்றதெல்லாம்,பெற விரும்புவதெல்லாம் மதம், மதம் மட்டுமே.
-
ஆன்மீகம் என்பது இந்தியாவில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
-
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளிலும் எந்திரங்களிலும் காணப்படுகின்ற அறிவு வெளிப்பாடுகள் உன்னதமானவை. ஆனால் இவை எதுவும் ஆன்மீக சக்தியை விட அதிக ஆற்றல் கொண்டவை அல்ல.
-

சுவாமி விவேகானந்தர் பாம்பனில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---
-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-8
-
நமது நாடு செயல்திறம் மிக்கதாக இருந்து வந்திருப்பதை நம் இனத்தின் வரலாறு காட்டுகிறது.
-
சிலர், இந்துக்கள் மந்தமானவர்கள் உற்சாகமற்றவர்கள் என்று பறைசாற்றி வருகிறார்கள். மற்ற நாட்டு மக்களுக்கு இது ஏதோ பழமொழி போலவே ஆகிவிட்டது. இந்தியா ஒரு போதும் அவ்வாறு மந்தமாக இருந்ததில்லை என்று கூறி , நான் அவர்களின் கருத்தையே ஒதுக்குகிறேன்.
-
ஆசீவதிக்கப்பட்ட நமது இந்த நாட்டைப்போல் செயல்திறம் வேறெங்கும் இவ்வளவு வெளிப்படையாக இருந்ததில்லை. மிகப் புராதனமான பெருந்தன்மை வாய்ந்த நமது இனம் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதே அதனை நிரூபிக்கிறது.
-
வாழ்வது மட்டுமல்ல, ஆண்டுகள் செல்லச்செல்ல பெருமை மிக்க அதன் வாழ்வு புத்திளமை பெற்று அழியாமலும் அழிக்க முடியாமலும் இருந்து வருகிறது. செயல்திறம் இங்கே மதத்தில் வெளிப்படுகிறது.
-
சுவாமி விவேகானந்தர் பாம்பனில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---
-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-9
-
உலகம் முழுவதன் கண்களும் ஆன்மீக உணவிற்காக இப்போது இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன; எல்லா இனங்களுக்கும் இந்தியா அதைத் தந்தாக வேண்டும். மனித குலத்திற்கான மிகச் சிறந்த லட்சியம் இங்கு மட்டுமே உள்ளது.
-
வரலாறு தொடங்கியதிலிருந்து இந்து மதக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பரப்புவதற்கு இந்தியாவிற்கு வெளியே எந்தப் பிரச்சாரகரும் சென்றதில்லை. ஆனால் இப்போது நம்மிடம் ஓர் ஆச்சரியகரமான மாறுதல் ஏற்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தர்மம் குன்றிஅதர்மம் மேலோங்கும் போது உலகிற்கு உதவ நான் மீண்டும்மீண்டும் வருகிறேன் என்று கூறுகிறார். நம்மிடமிருந்து நீதி நெறிக் கோட்பாடுகளைப் பெறாத நாடே இல்லை என்ற உண்மையை மத ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
-
ஆன்மா அழிவற்றது போன்ற மேலான கருத்துக்கள் எந்த மதத்திலாவது காணப்பட்டால், அது நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மிடமிருந்து பெறப்பட்டதே ஆகும்.
-
ஆசைகளை வெல்வதன் வாயிலாக மட்டுமே முக்தி கிட்டும் , ஜடப்பொருளின் தளையில் கட்டுண்ட எந்த மனிதனும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். இந்த மகத்தான உண்மையை எல்லா நாடுகளும் மெல்லமெல்லப் புரிந்து கொள்ளவும் பாராட்டவும் தொடங்கி இருக்கின்றன
-
. இந்த உண்மையைச் சீடன் புரிந்து கொள்ளும் நிலையை அடைந்ததும், குருவின் வார்த்தைகள் அவனது உதவிக்கு வருகின்றன.
-
நம் இறைவன் எல்லா மதங்களின் இறைவன். இந்தக் கருத்து இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது, உலகின் வேறு சாஸ்திரங்கள் எதிலாவது இத்தைகைய கருத்தைக் காட்ட முடியுமா என்று உங்களுக்குச் சவால் விடுகிறேன்.
-
-
சுவாமி விவேகானந்தர் பாம்பனில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---
-
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-10
-
கடவுளின் திருவுளத்தால் இந்துக்களாகிய நாம் இப்போது நெருக்கடியும் பொறுப்பும் மிக்க இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறோம்.
-
ஆன்மீக உதவகிக்காக மேலை நாடுகள் நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் உலக மக்களுக்கு ஒளி காட்டுகின்ற தார்மீகப் பொறுப்பு பாரதத் தாயின் பிள்ளைகளிடம் உள்ளது. 
-
அதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.
-
ஒன்றை நாம் கவனிக்கலாம்.மற்ற நாடுகளின் மாமனிதர்கள், ஏதோ மலைக்கோட்டையில் வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது வெளிவந்து வழிப்போக்கர்களைக் கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திய கொள்ளையர் தலைவனின் வழி வந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள்.
-
ஆனால் இந்துக்களாகிய நாமோ, மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்து, கிழங்குகளையும் கனிகளையும் உண்டபடி, இறைவனை தியானம் செய்து வந்த ரிஷிகளின், மகான்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவதில் பெருமைப்படுகிறோம்.
-
நாம் இப்போது இழிவையும் பிற்போக்கையும் அடைந்திருக்கலாம். எவ்வளவுதான் இழிவையும் பிற்போக்கையும் அடைந்திருந்தாலும், நமது மதத்திற்காக, சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் தொடங்கினால் மறுபடியும் மகத்தானவர்களாக ஆகிவிடுவோம்.
-
-
சுவாமி விவேகானந்தர் பாம்பனில் பேசியது
-
---விவேகானந்தர் விஜயம்---
-

No comments:

Post a Comment