Sunday 4 December 2016

கடைசி நாட்கள். பாகம்-8

சுவாமி விவேகானந்தரின் கடைசி நாட்கள். பாகம்-8
--
கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
-
அவரிடம் சுவாமிஜி கூறினார்,” இன்று என் உடம்பு லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன் ”என்றார்.தமது அறையில் வடமேற்கு நோக்கி ஜெபமாலையுடன் ஜெபம் செய்ய தொடங்கினார்.அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு கூறினார்.
-
சுமார் 6.30 மணியளவில் சீடரை கூப்பிட்டு,உஷ்ணமாக இருக்கிறது,அதை ஜன்னல் கதவுகளை திறந்து வை என்றார். பிறகு தமது தலையில் விசிறிமூலம் சிறிது வீசுமாறு கூறினார், சிறிது நேரம் சென்ற பிறகு போதும் இனி என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்போது அவர் கையில் ஜெபமாலையுடன் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
-
சுவாமிஜி இடது பக்கமாக லேசாக படுத்திருந்தார், சேிறிது நேரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை லேசாக வலது பக்கமாக திரும்பி படுத்தார்.
-
திடீரென அவரது கைள் நடுங்கின. கனவு கண்ட குழந்தை அழுவதுபோல சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அதேபோல் ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்பதம். 
-
அப்போது மணி 9.00
சுவாமிஜி சமாதியில் ஆழ்ந்திருப்பதாக விரஜேந்திரர் நினைத்தார். இருப்பினும் சற்று கவலையுடன் கீழே ஓடிச்சென்று அத்வைதானந்தரை அழைத்தார். அப்போது இரவு உணவுக்காக மணி அடித்தது அனைவரும் அங்கே திரண்டனர்.
-
அத்வைதானந்தர் சுவாமிஜியின் நாடியை சோதித்தார்.அவருக்கு எதுவும் புரியவில்லை.பிரேமானந்தர் நாடித்துடிப்பை பார்த்தார். நாடித்துடிப்பு நின்றிருந்தது.
-
அவர் சமாதியில் இருப்பதாக நினைத்து எல்லோரும் ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா என்று அவரது நாமத்தை உரத்த குரலில் உச்சரித்தார்கள். எந்தப்பயனும் இல்லை. உடனே ஓடிச் சென்று மருத்துவரை அழைத்துவரும் படி கூறினார்கள்.
-
பிரேமானந்தருக்கு உண்மை புரிந்துவிட்டது. அவர் ”ஓ ”என்று அழ ஆரம்பித்தார்
-
மருத்துவர் 10.30 மணிக்கு வந்தார். அவர் செயற்கை முறையில் மூச்சை மீண்டும் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார்.எந்த பலனும் இல்லை.
-
அப்போது நள்ளிரவு 12 மணி. சுவாமிஜி மாரடைப்பால் மரணமடைந்ததாக டாக்டர் மகேந்திர நாத் தெரிவித்தார்.
ஆனால் மருத்துவர்கள் என்ன காரணத்தை கூறினாலும்,அவர் சமாதியில் உடலைவிட்டு வெளியே வந்துவிட்டார் என்பதே உண்மை.
-
அப்போது சுவாமிஜிக்கு வயது 39வருடம் , 5மாதம் 24 நாள் ஆகியிருந்தது. அவர்40வது வயதை பார்க்கவில்லை.
-
சுவாமிஜியின் உடல் அதன் பிறகு,மலர்ச்சியாக இருந்தது. நோய் காரணமாக இறந்தவர் உடல்போல தோன்றவில்லை.அப்போது அவர் ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது கண்கள் மேல் நோக்கியவாறு இருந்தது.
-
காலையில் அவரது தாயார், இன்னொரு மகன் பூபேந்திரனுடன் வந்தார்.,அவரது சொகம் அளவுக்கு மீறியதாக இருந்தது. ஏற்கனவே கணவனையும் மகளையும் இழந்து சோகத்தில் இருந்த அவருக்கு இப்போது இன்னொரு மாபெரும் இழப்பு..
-
கிரீஷ்சந்திரகோஷ் வந்தார் அப்போது சுவாமி நிரஞ்சனானந்தர், நரேன் போய்விட்டான் என்றார். அதற்கு கிரீஷ்”இல்லை அவன் போகவில்லை,உடம்பை விட்டுவிட்டான் என்றார்.
-
அடுத்த நாள் பத்திரிக்கையில் செய்தி வெளியாயிற்று.மேலை நாடுகளுக்கு தந்தி கொடுக்கப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக பேலூர் மடத்திற்கு வரத்தொடங்கினார்கள்.
-
பிற்பகவில் சுவாமிஜியின் திருமேனியை கங்கை நீரில் குளிப்பாட்டினர். புதிய காவியுடை உடுத்தினர்.மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.மந்திரங்கள் முழங்கின,சங்குகள் ஒலித்தன,சாம்பிராணி புகை போடப்பட்டது.
-
சுவாமிஜி தம்மை எங்கு எரிக்க வேண்டும் என்று கூறியிருந்தாரோ அந்த மரத்தடியில் கொண்டுவரப்பட்டது.அனைத்தையும் புனிதமாக்கும் அக்னி அவரது திருமேனியைபுனிதமாக்கியது.
-
ஜெய் குருமஹராஜ் ஜீ கீ ஜெய்!
ஜெய் சுவாமிஜி மஹராஜ் ஜீ கீ ஜெய்! என்ற குரல் எங்கும் எழுந்தது.
-
சுவாமிஜி மகாசமாதி அடைந்த அந்த நேரத்தில் அவருக்கு பிரியமான சென்னையில் இருந்த சகோதர துறவி ராமகிருஷ்ணானந்தருக்கு(சசி) ஒரு குரல் தெளிவாக கேட்டது.-சசி!நான் உடம்பை உதறிவிட்டேன்!
-
சுவாமிஜி மறைந்துவிட்டாரா இனிமேல் எல்லாம் அவ்வளவு தானா?
-
இல்லை.அவர் இந்த தூல உடலை விட்டுவிட்டாலும் சூட்சும உடலோடு வாழ்ந்துவருகிறார்.அதன் மூலம் அவரால் இன்னும் பல பணிகளை செய்ய முடியும். அதை அவரே கூறுகிறார்
-
”கிழிந்த ஆடையை வீசி எறிவதுபோல் என் உடம்பை களைந்துவிடுவது நல்லதென்று ஒருநாள் தோன்றலாம்,ஆனாலும் நான் வேலை செய்வதை நிறுத்தமாட்டேன். உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை தூண்டிக்கொண்டே இருப்பேன்.அவர்கள் அத்தனை பேரும் தாங்கள் இறைவனுடன் ஒன்றுபட்டிப்பதை உணரும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்”
-
அப்படியானால் சுவாமிஜி இப்போது எங்கே இருப்பார்? 
--
---விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment