Monday, 19 December 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 54

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 54
---
ஒரு நாள் எனது வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் சுவாமிஜி பேசினார். இந்தியாவை இழிவாக பேசிய மிஷனரிகளை சுவாமிஜி மிகவும் தாக்கிப்பேசினார். அவர் வட்டார வழக்கத்தில் உள்ள வசை மொழிகளை இந்த சொற்பொழிவில் பயன்படுத்தினார். சொற்பொழிவு முடிந்த பின்பு ஹேன்ஸ்ப்ரோவிடம்” சொற்பொழிவு எப்படி இருந்தது என்று கேட்டார்? நன்றாக இருந்தது. ஆனால் கேட்பவர்களின் அதிருப்தியை சம்பாதித்துவிட்டீர்களோ என்று அஞ்சுகிறேன் என்றார் ஹோன்ஸ்ப்ரோ.
அவரது அச்சத்தை தனது உதாசீனச்சிரிப்பு ஒன்றாலே உதறிய சுவாமிஜி, மேடம், எனது பேச்சால் அதிருப்தியுற்று கேட்பவர்கள் மொத்தமாக எழுத்து வெளியே சென்ற நிகழ்ச்சிகள் கூட நியூயார்க்கில் நடைபெற்றதுண்டு. எனவே இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்றார்
-
சுவாமி விவேகானந்தர் பேசிய எல்லா சொற்பொழிவுகளும் சுமூகமாக நடைபெறவில்லை.
-
சில வேளைகளில் சிலர் எப்படியாவது முன்னுக்குப்பின் முரணான ஏதாவது கேள்விகளை கேட்டு அவரை மாட்டிவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.
1894-ல் ஒருமுறை அவர் கேம்ப்ரிட்ஜில் இந்தியப்பெண்கள் என்ற தலைப்பில் பேசும்போது,
-
இந்துப்பெண்களை கொடுமைப்படுத்துவது, சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுப்பது, சிறுவயதிலேயே தாயாக்குவது, குழந்தைகளை முதலைக்கு இரையாக்குவது போன்ற கேள்விகளை கேட்டார்கள்
(அமெரிக்கர்கள் .இந்துபெண்கள் தங்கள் பெண்குழந்தைகளை முதலையிடம் வீசிவிடுவார்கள் என நினைத்தார்கள்)
-
சுவாமிஜி அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறினார்.
-
கடைசியாக திருமணம் பற்றி பேசும்போது.”இந்தியாவிலுள்ள திருமண உறவையும் கணவன்-மனைவி தொடர்பையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியாது , ஏனெனில் இந்தியாவில் திருமணத்தின் நோக்கம் உடல் இன்பம் அல்ல. உடல் இன்பத்தை கடந்து செல்வது என்றார்.
இந்த கேள்விகை் கேட்ட பெண் மீண்டும் மீண்டும் இதே கேள்வியைக்கேட்டார். சுவாமிஜியின் பொறுமை எல்லையை தாண்டியது.
-
தமது கை காயப்படும் அளவுக்கு கையை ஓங்கி மேஜையின் மீது அடித்து சொன்னார். உங்களால் புரிந்து கொள்ள முடியாது.இருளின் தனிமையில், காமத்தின் எழுச்சி காரணமாக ஓர் உயிரை உற்பத்தி செய்யம் உறவுமுறை இந்தியாவில் கிடையாது ” என்று அடித்து சொன்னார்.
இதைக் கேட்டதும் அந்த பெண்ணும் எழுந்து, “இவர் பொய் சொல்கிறார்.இவர் பொய்யர் என்று கத்தினாள். உடனே சுவாமிஜி” இந்தியாவைப்பற்றி என்னைவிட நீங்கள் நன்றாக அறிந்திருப்பது போல் உள்ளது. நீங்களே பேசுங்கள், நான் வருகிறேன் என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி நடந்து சென்றார்.. அந்த பெண்ணும் விடவில்லை சுவாமிஜியின் பின்னால் நடந்து சென்று அவரை திட்டிக்கொண்டே இருந்தாள்.
கடைசியில் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டத்தைவிட்டு வெளியேற்றினார்கள். பிறகு சுவாமிஜியின் சொற்பொழிவு தொடர்ந்து நடந்தது.
-
அந்த பெண் வெளியேறும் போது அந்த கூட்டத்திற்கு வந்திருந்த,ஹேன்ஸ்ப்ரோவிடம் ஆத்திரமாக கேட்டாள், முட்டாள் பெண்ணே! அந்த மனிதர் பெண்களை வெறுக்கிறார் என்பதை கூட உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?
அதற்கு ஹேன்ஸ்ப்ரோ, இல்லை அவர் ஒருபோதும் எங்களை வெறுப்பதில்லை என்று பதிலளித்தாள்.
---
---தொடரும்...
--
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment