Monday, 19 December 2016

பிரிவுகள் இருந்தேயாக வேண்டும் ஆனால் பிரிவினைவாதம் கூடாது

பிரிவுகள் இருந்தேயாக வேண்டும் ஆனால் பிரிவினைவாதம் கூடாது 
-
இந்த நாட்டில் போதிய அளவு சமயப் பிரிவுகள் உள்ளன. தற்காலத்தில் போதுமானவை உள்ளன, எதிர்காலத்திலும் போதுமானவை தோன்றும். இது நமது சமயத்தின் சிறப்புத் தன்மையாகும். நமது சமயத்தின் நுண் தத்துவங்கள் நம் தலைகளுக்கு மேல் விரிந்து கிடக்கும் வானம்போல் பரந்தவை இயற்கையைப் போல் நிலையானவை; அவற்றின் மீது எத்தனையெத்தனையோ விதமான விளக்கங்கள் எழுதுகின்ற அளவிற்குப் பரந்த போக்கு கொண்டவை. எனவே இங்கே சமயப் பிரிவுகள் இயல்பாக இருந்தே தீரும். ஆனால் இருக்கத் தேவை யற்றது எது என்றால் அவற்றுக்கிடையே சண்டை 
-
பிரிவுகள் இருந்தேயாக வேண்டும் ஆனால் பிரிவினைவாதம் கூடாது பிரிவினைவாதத்தால் இந்த உலகம் முன்னேறப் போவதில்லை ஆனால் பிரிவுகள் இல்லையென்றால் உலகிற்கு முன்னேற்றம் இல்லை. ஏதோ ஒரு கூட்டத்தினர் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லையற்றுப் பரந்திருக்கும் சக்தியை ஏதோ சிலரால் கையாளமுடியாது. எனவே அந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாகிறோம். இதுவே பல பிரிவுகள் உண்டாக ஏதுவானது ஆன்மீக சக்திகளைப் பயன்படுத்துவதற்காக சமயப் பிரிவுகள் இருக்கட்டும்.
-
ஆனால் இந்தப் பிரிவுகள், இந்த வேறுபாடுகள் வெறும் தோற்றம் மட்டுமே, இந்த எல்லா வேறுபாடுகளுக்கு இடையிலும் சமரசத்தின் ஓர் இழை ஊடுருவி நிற்கிறது, ஓர் அழகிய ஒருமைப்பாடு அனைத்துள்ளும் நிலவுகிறது என்று நமது சாஸ்திரங்கள் முழங்கும் போது சமயச் சண்டைகள் தேவைதானா? ஏகம் ஸத்விப்ரா; பஹுதா வதந்தி உள்ளது ஒன்றே ரிஷிகள் அதனைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள், என்றுதான் நமது மிகப் புராதன நூல்கள் கூறுகின்றன. எனவே எல்லா சமயப் பிரிவினைவாதப் போராட்டங்களும் சண்டைகளும் இருக்குமானால் பொறாமையும் வெறுப்பும் நிலவுமானால் அது நமக்குத்தான் இழிவு. மேன்மைமிகு முன்னோர்களின் வழித்தோன்றல்கள் என்று இது அவமானமே தவிர, வேறல்ல.
--
இந்துமதம்-சுவாமி விவேகானந்தர்
-
வாட்ஸ்அப் குழு-9789374109


No comments:

Post a Comment