Monday, 12 December 2016

இந்துமதம்-சுவாமி விவேகானந்தர்

இந்துமதம்-சுவாமி விவேகானந்தர்
--
இப்போது புதுப்பிக்கவும் புனரமைப்பதற்குமான காலம் வந்திருக்கிறது; சிதறிக் கிடக்கின்ற நம் சக்திகளை யெல்லாம் திரட்டி ஒரு மையத் தில் குவித்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏறக்குறைய தடைபட்டுப் போய்விட்ட இந்த நாட்டின் முன்னேற்றப் பயணத்தை அதன்மூலம் வழி நடத்துவதற்கான காலம் வந்திருக்கிறது. இந்த வீடு சுத்தமாக்கப்பட்டு விட்டது இனி இதில் புதிதாகக் குடியேறலாம். பாதை சீரமைக்கப்பட்டுவிட்டது, இந்துக் குழந்தைகளே, முன்னேறிச் செல்லுங்கள்.
-----
இந்த நாட்டில் போதிய அளவு சமயப் பிரிவுகள் உள்ளன. தற்காலத்தில் போதுமானவை உள்ளன, எதிர்காலத்திலும் போதுமானவை தோன்றும். இது நமது சமயத்தின் சிறப்புத் தன்மையாகும். நமது சமயத்தின் நுண் தத்துவங்கள் நம் தலைகளுக்கு மேல் விரிந்து கிடக்கும் வானம்போல் பரந்தவை இயற்கையைப் போல் நிலையானவை; அவற்றின் மீது எத்தனையெத்தனையோ விதமான விளக்கங்கள் எழுதுகின்ற அளவிற்குப் பரந்த போக்கு கொண்டவை. எனவே இங்கே சமயப் பிரிவுகள் இயல்பாக இருந்தே தீரும். ஆனால் இருக்கத் தேவை யற்றது எது என்றால் அவற்றுக்கிடையே சண்டை 
-
பிரிவுகள் இருந்தேயாக வேண்டும் ஆனால் பிரிவினைவாதம் கூடாது பிரிவினைவாதத்தால் இந்த உலகம் முன்னேறப் போவதில்லை ஆனால் பிரிவுகள் இல்லையென்றால் உலகிற்கு முன்னேற்றம் இல்லை. ஏதோ ஒரு கூட்டத்தினர் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லையற்றுப் பரந்திருக்கும் சக்தியை ஏதோ சிலரால் கையாளமுடியாது. எனவே அந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாகிறோம். இதுவே பல பிரிவுகள் உண்டாக ஏதுவானது ஆன்மீக சக்திகளைப் பயன்படுத்துவதற்காக சமயப் பிரிவுகள் இருக்கட்டும்.
-
ஆனால் இந்தப் பிரிவுகள், இந்த வேறுபாடுகள் வெறும் தோற்றம் மட்டுமே, இந்த எல்லா வேறுபாடுகளுக்கு இடையிலும் சமரசத்தின் ஓர் இழை ஊடுருவி நிற்கிறது, ஓர் அழகிய ஒருமைப்பாடு அனைத்துள்ளும் நிலவுகிறது என்று நமது சாஸ்திரங்கள் முழங்கும் போது சமயச் சண்டைகள் தேவைதானா? ஏகம் ஸத்விப்ரா; பஹுதா வதந்தி உள்ளது ஒன்றே ரிஷிகள் அதனைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள், என்றுதான் நமது மிகப் புராதன நூல்கள் கூறுகின்றன. எனவே எல்லா சமயப் பிரிவினைவாதப் போராட்டங்களும் சண்டைகளும் இருக்குமானால் பொறாமையும் வெறுப்பும் நிலவுமானால் அது நமக்குத்தான் இழிவு. மேன்மைமிகு முன்னோர்களின் வழித்தோன்றல்கள் என்று இது அவமானமே தவிர, வேறல்ல.
--

ஓர் இந்து ஆன்மீக உணர்வின்றி இருப்பானானால், அவனை நான் இந்து என அழைக்க மாட்டேன் பிற நாடுகளில் மனிதனுக்குப் பெரும்பாலும் அரசியல்தான் முதன்மையானதாக இருக்கும் அதனுடன் ஏதோ சிறிது சமயமும் இருக்கும் ஆனால் இந்தியாவில் நமது வாழ்க்கையின் முதற்கடமை முக்கியக் கடமை ஆன்மீகம் தான். அதற்குப் பிறகு நேரம் இருந்தால் மற்றவை இடம் பெறும்.
-
சிதறிக் கிடக்கின்ற ஆன்மீக சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை கொண்டுவர முடியும். ஆன்மீகம் என்ற ஒரே ராகத்திற்கு ஏற்ப இசைந்து துடிக்கின்ற இதயம் கொண்டவர்களின் சங்கமத்தால்தான் இந்த நாட்டைஉருவாக்க முடியும். 

--
இந்துசமயம் தான் நமது தேசிய பண்பு, இதை யாரும் அசைக்க முடியாது. வாளுடனும் நெருப்புடனும் வரும்(முஸ்லீம்) காட்டுமிரண்டிகளும் சரி மிருகத்தனமான சமயங்களைப் பரப்ப வரும்(கிறிஸ்தவ) காட்டுமிராண்டிகளும் சரி இவர்களில் யாராலும் அந்தச் சாரத்தை அந்த மாணிக்கத்தைத் தொட முடியாது
-
இந்த இனத்தின் உயிர் இருக்கின்ற பறவை யைக் கொல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை. இதுவே இந்த இனத்தின் உயிர்நாடி இந்த உயிர்நாடி இருக்கும்வரை சூரியனின் கீழ் உள்ள(வெள்ளைக்காரர்கள்) எந்தச் சக்தியாலும் இந்த இனத்தை அழிக்க முடியாது , உலகின் எல்லா சித்திரவதைகளும் துன்பங்களும் நம்மை வருத்தாமல் கடந்து சென்றுவிடும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றவை அனைத்திலும் மகோன்னதமான ஆன்மீகத்தை நாம் பற்றிக்கொண்டிருக்கும் வரை நாமும் பிரகலாதனைப்போல் அக்கினியில் குளித்தெழுந்து வெளிவந்து விடுவோம்.
-

மிஞ்சிப்போனால் அறிவியல்கள் நமக்கு உணவும் உடையும் தரலாம், பிறர்மீதுசெலுத்துவதற்கான அதிகார பலம் தரலாம்; சக மனிதர்களை எப்படி வெல்வது, எப்படி ஆள்வது பலவீனர்களைப் பலமானவர்கள் எப்படி அடக்குவது என்பதையெல்லாம் கற்றுத் தரலாம். நமது முன்னோர்கள் விரும்பியிருந்தால் கட்டாயமாக இத்தகைய அறிவியல்களைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவற்றை நாடாததற்காக நாம் இறை வனைப் போற்றுவோம். அந்த அறிவியல்களை நாடாமல் அவற்றைவிட மேன்மையான அளவற்ற மடங்கு உன்னத மான அளவற்ற மடங்கு ஆனந்தம் தருகின்ற சமயத்தை அவர்கள் கண்டு அவர்கள் பிடித்துக் கொண்டார்கள்.
-
இன்று அது தேசியப் பண்பாகிவிட்டது. தந்தையிடமிருந்து மகனுக்கு என்ற ரீதியில் பரம்பரைபரம்பரையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து இன்று அது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. ,நம் வாழ்வோடு வாழ்வாகியுள்ளது நம் நரம்புகளில் ஓடுகின்ற ரத்தத்தில் கலந்து ஒவ்வொரு துளியிலும் அதிர்ந்து, நம் இயல்பாகவே ஆகிவிட்டது. அதன் காரணமாக சமயம், இந்து இந்த இரண்டும் ஒரே பொருளைத் தருகின்ற சொற்களாகி விட்டன.
--

--
நமது இந்தப் பொன்னாட்டின் மீது காட்டு மிராண்டிகளின் படையெடுப்புகள் அலை அலையாகப் புரண்டு வந்தன, அல்லாஹு அக்பர் என்னும் ஒலி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வானையே நிறைத்துப் பரவியது, தன் உயர் எந்தக் கனம் போகுமோ என்பது தெரியாமல் ஒவ்வொர் இந்துவும் உறைந்து போயிருந்தான்.
-
சரித்திரப் பிரசித்தி பெற்ற உலக நாடுகளில் மிக அதிகமான துன்பங்களுக்கு உள்ளானதும் மிக அதிகமான முறை கீழடக்கப் பட்டதுமான நாடு இது. என்றாலும் நாம் ஏறக்குறைய அப்படியே , அதே இனமாக தேவையானால் அத்தகைய துன்பங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சந்திப்பதற்குத் தயராக இருக்கிறோம். அது மட்டுமல்ல நாம் வலிமையோடு இருப்பதுடன் , வெளிநாடுகளுக்குச் செல்லவும் தயராக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் சமீப காலத்தில் தெரியும் செய்கின்றன. ஏனென்றால் விரிவடைவது தானே வாழ்வின் அறிகுறி.
-
நமது லட்சியங்களும் சிந்தனைகளும் முன்புபோல் நம் நாட்டு எல்லைக்குள் அடங்கிக்கிடக்கவில்லை என்பதை இன்று காண்கிறோம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவை அணிவகுத்து வெளியே செல்கின்றன, பிற நாடுகளின் இலக்கியங்களில் ஊடுருவுகின்றன, மற்ற நாடுகளில் தனக்குரிய இடத்தைப் பெறு கின்றன, சில நாடுகளில் அதிகார பீடத்தில் கூட இடம் பிடித்திருக்கின்றன. இதற்கான விளக்கம் என்னவென்றால் உலகின் ஒட்டுமொத்த முன்னோற்றத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது, மேன்மையதனது, மனிதனின் மனத்தை ஆக்கிரமிக்க முடிந்தவற்றுள் மிகமிக நுண்மையானது.

--
நாம் இந்துக்கள். இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. அந்தச் சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத்தையும் நான் ஏற்றுக் கொள்ள வில்லை.
-
பழங்காலத்தில் அந்தச் சொல் சிந்து நதியின் மறுகரையில் வாழ்பவர்கள் என்று பொருள்பட்டது நம்மை வெறுப்பவர்களுள் பலர் தற்போது அதற்கு மோசமான பொருள் கூறலாம். ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை.
-
இன்று இந்து என்ற சொல் மோசமான எதையாவது குறிப்பதாக இருக்குமானால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடியாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம்.
-
நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கைக் கோட்பாடுகளுள் ஒன்றாக உள்ளது. இதுவரை பிறந்ததுள்ள கர்வம் மிக்கவர்களுள் நான் ஒருவன் உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன் – இந்து என்ற கர்வம் என் பெருமையின் காரணமாக அல்ல எனது பாரம்பரியத்தின் பெருமைக்காகவே ஆகும்.
-
கடந்த காலத்தைப்பற்றி நான் அதிகமாகப் படிக்குந்தோறும், நான் பின்னோக்கிப் பார்க்குந்தோறும் இந்தக் கர்வம் என்னிடம் மேலோங்குகிறது. அது எனக்கு வலிமையைத்தருகிறது; ஆழ்ந்த நம்பிக்கை நிறைந்த தைரியத்தைத் தருகிறது; பூமியின் தூசியிலிருந்து என்னை உயர்த்துகிறது; நமது அந்த மகத்தான முன்னோர்கள் வகுத்துச்சென்றுள்ள சீரிய திட்டங்களைச் செயல்படுத்த வைத்திருக்கிறது.
-
புராதான இந்து குழந்தைகளே! என்னைப்போலவே நீங்களும் அத்தகைய கர்வம் கொள்ளுங்கள்! உங்கள் முன்னோர்களிடம் அத்தகைய நம்பிக்கை உங்கள் ரத்தத்தில் பொங்கட்டும், அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொர் அம்சத்திலும் கலந்து பரவட்டும், உலகின் கதிமோட்சத்திற்காக அது செயல்படட்டும்!
-

--\
இறைவன் ஒருவன் தான் மகான்கள் அதைப் பல பெயர்களால் வழங்குகிறார்கள் (ரிக்வேதம்). இந்த ஒரு வாக்கியத் திலிருந்து பெரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
-
இந்திய நாடு ஒன்றில் தான் சமய சம்பந்தமான கொடுமைகள் நடக்கவில்லை என்பதைக் கேட்க உங்களுள் சிலருக்குத் திகைப்பாக இருக்கலாம் . ஆத்திகன், நாத்திகன் , அத்வைதி , துவைதி எல்லோரும் அங்கே ஒரு தீங்கும் இல்லாமல் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். கோயில்களின் படிகளில் நின்று , கடவுளுக்கு எதிராகவே பேச உலோகாயதர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கடவுள் என்பதே ஒரு மூட நம்பிக்கை தேவர்கள், வேதங்கள், சமயம் எல்லாமே தங்கள் நலத்திற்காகப் புரோகிதர்கள் புனைந்த கதைகள் என்றெல்லாம் நாடு முழுவதும் அவர்கள் பேசினார்கள் அவர்களை யாரும் ஒன்றும் செய்யவில்லை.
-
புத்தர் தாம்சென்ற இடமெல்லாம் இந்துக்களுக்குப் புனிதமான ஒவ்வொன்றையும் பழித்துக் கீழே தள்ள முயன்றார். ஆயினும் நீண்ட ஆயுள் வாழ்ந்து தான் புத்தர் இவ்வுலகம் நீத்துச் சென்றார். கடவுள் என்றால் சிரித்துப் பரிகசித்த சமணர்களும் அப்படித்தான். கடவுள் என்று ஒருவர் எப்படி இருக்க முடியும்? அது வெறும் மூட நம்பிக்கை ! என்றார்கள் அவர்கள். இப்படி எவ்வளவோ உதாரணங்கள் உள்ளன.
-
முகமதியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு சமய சம்பந்தமான கொடுமை என்றால் என்ன என்பது அங்கே யாருக்கும் தெரியாது. அன்னியர் அங்கு வந்து அதைச் செய்த பிறகுதான் இந்துக்களுக்கு அதுபற்றியே தெரிய வந்தது.
-
கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளைக் கட்டுவதற்கு இந்தியர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் உதவி செய்தார்கள் இப்பொழுதும் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அங்கு ஒரு போதும் ரத்தம் சிந்தப்பட்டதில்லை; வைதீக சமயத் திற்குப் புறம்பாகவுள்ள பௌத்தம் போன்ற சமயங்கள் கூடத் தாக்கப்பட்டதில்லை.
---

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து!
-
பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது . உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்கு பவர்களைநான் காணும்போது,' பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா? என்று என்னை நானே கேட்டுக் கொள்றேன்.
-
மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது
--

இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை புலன்வசப்பட்ட சாதரானவாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால் அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான் ஜடப் பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான் அவன் அவரைக் காண வேண்டும் அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும் ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன் நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அவர் கூறுவதுதான் நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி இந்து சமயம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்ச்சிகளிலும் அடங்கிவிடாது வெறும் நம்பிக்கை அல்ல உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து சமயம்.
----
---

ஆன்மா தெய்வீகமானது ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறை நிலையை அடைகிறது அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
-
கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிலும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும் எனவே அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படி செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம் தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர் அப்போதுதான் இதயக் கோணல்கள் நேராகின்றன. சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
-
இதுதான் இந்து சமயத்தின் மையமும் அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
---

அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! ஆ, ஆ! எவ்வளவு இனிமையான எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சதோதரர்களே அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாதபேரின்பத்தின் வாரிசுகளே ஆம் உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள் புனிதமானவர்கள் பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே வீறுகொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள்.(கிறிஸ்தவர்கள் மனிதர்களை ஆடு என்றும் ஏசுவை ஆடுகளை மேய்ப்பவர் என்றும் கூறுவார்கள்) நீங்கள் அழியாத ஆன்மாக்கள்! நீங்கள் ஜடப்பொருள் அல்ல நீங்கள் உடல் அல்ல; ஜடப்பொருள் உங்கள் பணியாள் .நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.
--

மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது மரணம் என்பது ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது பிறப்புக்குப்பின் இறப்பு இறப்புக்குப் பின் பிறப்பு என்று ஆன்மா மேல்நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்,
-

தான் ஒர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான் ஆன்மாவை வாள் வெட்ட முடியாது நெருப்பு எரிக்க முடியாது நீர் கரைக்க முடியாது , காற்று உலர்த்த முடியாது, ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம் இந்த மையம் ஓர்உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான்
-
ஜடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல அது இயல்பாகவே சுதந்திரமானது தளைகள் அற்றது வரம்பற்றது, புனிதமானது தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது தான் ஜடத்துடன் கட்டுப்பட்டதாகத் தன்னைக் காண்கிறது எனவே தன்னை ஜடமாகக் கருதுகிறது.
-

அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல் உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக்கதைகள் கொண்ட மிகச்சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பவுத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திகவாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்று சேரும் பொது மையம் எங்கே இருக்கிறது. ஒன்று சேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது. இந்த கேள்விக்கு தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.

அருள்வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் சமயத்தை பெற்றுள்ளனர். வேதங்களுக்கு துவக்கமும், முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்கு துவக்கமும், முடிவும் இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்கு தோன்றும், ஆனால் வேதம் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால் வெவ் வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள்,
---
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதம் இந்துமதம் .இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைச் சமயங்கள் உண்டாயின. அவை வேதநெறியின் அடித்தளத்தை உலுக்கி விடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டடால், எப்படிக்கடல் சிறிது பின்னோக்கி சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்து கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளைச் சமயங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்ச் சமயத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
-
சுவாமி விவோகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பு வரை.அமெரிக்காவில் இந்துக்கள் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிகக்கேவலமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.இந்துக்கள் காட்டுமிராண்டிகள்,அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்,இந்துமதம் பண்பாடற்ற காட்டுவாசிகளின் மதம் என்றே போதிக்கப்ட்டது.அது மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளின் பாடத்திலும் இது சேர்க்கப்பட்டிருந்தது. சுவாமிஜியிடம் பலமுறை இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
--
கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:
--
கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்? கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது
அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? …. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது …
----
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்.ஆகவே எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
----
வேதத்தின் மீது அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தான் வேதம் படிக்க வேண்டும் என்று எந்த வேதங்களிலும் இல்லை.
----
நாம் இனத்தால், மொழியால், ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நமது மதமாகும். அது தான் நமது பொதுவான அடித்தளம்.
---

No comments:

Post a Comment