Monday, 19 December 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 58

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 58
---
டிசம்பர் 1900 சுவாமிஜி 2வது முறையாக வெளிநாடு சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார்.
-
முதல் தடவை இந்தியா வரும்போது இந்தியா முழுவதும் அவரை சிறப்பாக வரவேற்றது.ஆனால் இந்த முறை முற்றிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா வந்தார்.
-
சுவாமிஜி கல்கத்தாவைத் தொட்டபோது ஆஸ்துமா அவரிடம் ஒட்டிக்கொண்டது.நாட்கள் ஆக ஆக சிறுநீரகக்கோளாறு,நீரழிவு,இதயக்கோளாறு ,உடம்பு வீக்கம் போன்ற நோய்களும் தொற்றிக்கொண்டன.சில நேரங்களில் மூச்சுவிடுவதற்கே சிரமப்பட்டார்.பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் நிலைமை சரியாகவில்லை
-
.1902 மே மாதம் சுவாமிஜியின் ஒரு கண்ணிலுள்ள ரத்தநாளம் சீர்கெட்டு அவரது ஒரு பக்க பார்வையும் மங்கியது.
இந்த நாட்களில் சுவாமிஜி ஒரு சிறுவனைப்பொன்ற மனநிலையுடன் காணப்பட்டார்.
-
மான்,ஆடு,வாத்து போன்ற பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தார்.
இந்த நாட்களில் பேலூர் மடத்து துறவிகளுக்கு பயிற்சி அளிப்பதை முக்கிய பணியாக மேற்கொண்டார்.
-
காலை 4மணிக்கு கோவிலில் மணி அடிக்கும்.ஐந்து நிமிடங்கள் தாமதமாக சென்றாலும் அன்று மடத்தில் சாப்பாடுகிடையாது. பிச்சையெடுத்துவந்து தான் சாப்பிட வேண்டும் என்று நியதியை வைத்தார்.காலை முதல் இரவு வரை மடத்தில் உள்ள துறவிகளுக்கான பல நியதிகளை ஏற்படுத்தினார்.
-
அந்த நாட்களில் சுவாமிஜிக்கு ஆட்டுபால் கொடுக்கப்பட்டது.ஒரு நாள் பால் கறப்பதற்காக பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,பால் கறப்பவர்கள் தலையில் துணியை கட்டுவதைப்போல கட்டிக்கொண்டு,அவர்களைப்போல அமர்ந்து,இரண்டு கால் முட்டிகளுக்கு இடையில் பால் பாத்திரத்தை வைத்தபடி இரண்டு கைகளாலும் பால் கறக்க ஆரம்பித்தார்.அப்போது அவரை பார்ப்பவர்கள் ஒரு பால்காரர் என்றே நினைப்பார்கள். அந்த வேளையில் ஒரு இளைஞன் தன் நண்பனுடன் உலகப்புகழ் பெற்ற சுவாமி விவேகானந்தரை காண வந்தான்.அவர் பால் கறந்து கொண்டிருப்பதை கண்டபோது ஆச்சர்யத்தால் வாயடைத்து போனான். சிறிது நேரத்தில் பால் கற்து முடித்துவிட்டு சுவாமிஜி செம்பை கொண்டு உள்ளே சென்றார்.அந்த இளைஞன் தன் நண்பனைப் பார்த்து சொன்னான்.இவர் தான் சுவாமி விவேகானந்தர்.
-
தொடரும்....
-
----விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment