சுதேசமந்திரம்
---
ஓ இந்தியா! உனது பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துரவிகளுக்கேல்லாம் பெருந்துறவி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்ட உமாபதி சங்கரர் என்பதை மறவாதே! உன் திருமணம், உன் செல்வம், உன் வாழ்க்கை இவை புலனின்பத்திர்காக அல்ல, உன் தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என்பதை என்பதை மறவாதே! அன்னையின் பீடத்தில் பலியிடப்படுவதற்கே நீ பிரந்துள்ளாய் என்பதை மறவாதே!உன் சமுதாயம் மகாமாயையான அன்னையின் நிழல் என்பதை மறவாதே!

தாழ்ந்த ஜாதியினர், அறிவிலிகள்,ஏழைகள், படிக்காதவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள், எல்லோரும் உன்னுடைய ரத்தம், உன் சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே, துணிவுகொள். ‘நான் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்’ என்று கர்வத்துடன் சொல்.
‘அறிவற்ற இந்தியன், ஏழை இந்தியன், பிராமண இந்தியன்,கீழ்ஜாதி இந்தியன் எல்லோரும் என் சகோதரர்கள்’ என்று சொல்; இடுப்பில் கந்தை மட்டும் கட்டிக்கொண்டு நீயும் உரத்த குரலில் பெருமையாகக் கூறு; இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது வாழ்க்கை, இந்தியாவின் தேவதேவியர் எனது தெய்வங்கள். இந்தியச் சமுதாயம் என் குழந்தைப் பருவத்தின் தொட்டில், என் வாலிபப் பருவத்தின் இன்பத்தோட்டம், என் முதிய பருவத்தின் வாரணாசி.
சகோதரா சொல்-‘இந்திய மண்தான் எனது சொர்க்கம். இந்தியாவின் நலன்தான் என்னுடைய நலன்.’ இரவும் பகலும் திரும்பத்திரும்பப் பிரார்த்தனை செய்-‘ ஓ கௌரி மணாளா, ‘ஓ உலக நாயகியே, எனக்கு மனிதத்துவத்தைக் கொடு; அம்மா, என்னுடைய பலவீனத்தைப் போக்கு; என் கோழைத்தனத்தை போக்கு! என்னை மனிதனாக்கு.’
--
சுவாமி விவேகானந்தர்
--
சுவாமி விவேகானந்தர்
No comments:
Post a Comment