வேதாந்த விளக்கம்-சுவாமி விவேகானந்தர்-பகுதி-20
-
கிம் ஸ்விதாஸீததிஷ்டானமாரம்பணம் கதமத்ஸ்வித் கதாஸீத்?..(ரிக்வேதம்.10.81.2)
-
”இந்த பிரபஞ்சம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? எப்படி நிலைத்து நிற்கிறது?”
”அப்போது அங்கே ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லாமலும் இல்லை. காற்று இல்லை, வானம் இல்லை. எதுவுமே இல்லை. அனைத்தையும் எது மூடியிருந்தது?எல்லாம் எங்கே நிலைபெற்றிருந்தது? அப்போது இறப்பு இல்லை.இறவாத நிலையும் இல்லை.பகல் இரவாகி, இரவு பகலாகும் மாற்றமும் இல்லை.அது இருந்தது.அந்த இறைவனின் இருப்பையே மறைப்பதுபோல் அந்த மூச்சு இருந்தது.ஆனால் அது இயங்கத் தொடங்கவில்லை.”
-
அது இயக்கமற்றிருந்தது என்ற கருத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.முதலில் எங்கும் இருளே இருந்தது.இருளில் மறைந்துகிடக்கும் இருள் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன.
-
காமஸ்ததக்ரே ஸமவர்த்ததாதி மனஸோ ரேத....(ரிக்வேதம்.10.129.8)
-
”மனத்தின் ஆதி விதையான ஆசை என்பது முதன் முதலில் எழுந்தது. ரிஷிகள் தங்கள் உள்ளத்தில் ஞானத்தின் மூலம் தேடி, இருப்பு, இல்லாமை இரண்டிற்கும் இடையே உள்ள பந்தத்தை கண்டுகொண்டார்கள்”
-
இயம் விஸ்ருஷ்டிர்யத ஆபபூவ யதி வா ததே யதி....(ரிக்வேதம்.10.129.7)
-
”இந்த பரமபுருஷன் கூட ஒருவேளை அறியமாட்டான்”
-
படைப்பு எப்படி உருவாகியது? படைப்பு என்பதற்கான காரணம் சங்கல்பம் என்று கூறப்படுகிறது. முதலில் எது இருந்ததோ அது சங்கல்பமாக மாறியது. சங்கல்பம் ஆசையாக வெளிப்பட்டது. இந்த ஆசை தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால் நாம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிரபஞ்சத்தை காக்க கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்து கூட ரிஷிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.
--
சுருக்கமாக..
1.படைப்புக்கு முன் என்ன இருந்தது?இருளை இருள் மறைத்திருந்தது.இதற்கு முன் இருந்த எல்லாம் எங்கே சென்றன என்று யாருக்கும் தெரியாது.இறைவனின் மூச்சே நிற்றிருந்தது.
2.சங்கல்பம் தோன்றியது, அதிலிருந்து ஆசை தோன்றியது.
---
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்222

No comments:
Post a Comment