Sunday, 4 December 2016

பக்திமிக்க மதப்பிரச்சாரகன்

சுவாமி விவேகானந்தர் கூறிய கதைகள்
---
பக்திமிக்க மதப்பிரச்சாரகன் ஒருவன் இறைவனின் பெருமையைப்பற்றி பேசுவதற்காக வெளியூர் சென்றிருந்தான்.அவன் தன் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவரது மனைவி வாசலில் காத்திருந்தாள்.
-
அவன் வந்ததும்.“என் அன்பே ஒருவர் ஒரு பொருளை உங்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கிறார்,நீங்கள் வெளியே சென்றிருக்கும்போது உங்களிடம் கூறாமலே அதை எடுத்துச்சென்றுவிடுகிறார்.அதற்காக நீங்கள் வருந்துவீர்களா? என்று கேட்டாள். நிச்சயமாக வருந்தமாட்டேன்.அது அவரது பொருள்,அவரிடமே மீண்டும் சென்றுவிட்டது. இதில் வருந்துவதற்கு எதுவும் இல்லை என்றார்.
-
இப்போது தன் கணவரை வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள், காலராநோயால் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்த மூன்று மகன்களின் பிணத்தையும் காண்பித்தாள்.
-
இறைவன் தந்தான் அவனே எடுத்துக்கொண்டான் என்று கூறி அந்த உடல்களை அடக்கம் செய்தான்.
-
நடப்பபை அனைத்தும் இறைவனின் செயல்களாலேயே நடக்கின்றன என்று நம்பும் பக்தனின் மனநிலை இவ்வாறு இருக்க வேண்டும்.
--
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 6.பக்கம் 406
--
---விவேகானந்தர் விஜயம்--- சுவாமி வித்யானந்தர் 97 89 37 41 09

No comments:

Post a Comment