Saturday, 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-19

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-19
(சுவாமி விவேகானந்தர்)
-
யோகம்-தியானம்-சமாதி-பாகம் .1
-
யோகத்தில் இரு பிரிவுகள் உள்ளன.
-
ஒன்று அபாவம், மற்றது மஹாயோகம். தனது ஆன்மாவைச் சூன்யமாக, குணமற்றதாக தியானிப்பது அபாவம். ஆன்மாவைப் பேரானந்தம் நிறைந்ததாக, நிர்மலமானதாக, இறைவனுடன் ஒன்றுபட்டு இருப்பதாகக் காண்பது மஹாயோகம். இந்த இரண்டின் மூலமாகவும் யோகி தன் ஆன்மாவை உணர்கிறான்.
-
மஹாயோகத்தில் யோகி தன்னையும் பிர பஞ்சம் முழுவதையும் இறைவனாகக் காண்கிறான். இது யோகங்கள் அனைத்திலும் உயர்ந்தது. மேலான இதனுடன் ஒப்பிடும்போது, நாம் படித்தும் கேட்டும் உள்ள பிற யோகங்கள், யோகம் என்று கூறத் தகுதியற்றவை.
-
யோகத்தில் எட்டு படிகள் உள்ளன. ஒவ்வொரு படியாக முன்னேற வேண்டும்
-
1.யமம், 2.நியமம், 3.ஆசனம், 4.பிராணாயாமம், 5.பிரத்யாஹாரம், 6.தாரணை, 7.தியானம், 8.சமாதி என்பவை ராஜயோகத்தின் எட்டு படிகள்.
-
யமம் ஐந்து படிகளை கொண்டது
-
1A.அஹிம்சை, 1Bசத்தியம், 1Cஅஸ்தேயம், 1Dபிரம்மச்சரியம், 1Eஅபரிக்கிரகம்,ஆகியவை யமம். -
இவை மனத்தை அதாவது சித்தத்தைத் தூய்மையாக்கும்
-.
1A.மனத்தாலோ வாக்காலோ உடலாலோ எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது அஹிம்சை. அஹிம்சையை விட மேலான தர்மம் ஒன்றில்லை.
-
1B.சத்தியத்தால் நாம் கர்ம பலன்களை அடைகிறோம். படைப்பிலுள்ள எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமலிருப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கின்ற ஆனந்தத்தைவிடமேலான ஆனந்தம் எதுவுமில்லை. சத்தியத்தால் அனைத்தையும் அடையலாம். சத்தியத்திலேயே அனைத்தும் நிலைபெற்றிருக்கின்றன. உள்ளதை உள்ளபடி கூறுதல்-இதுதான் சத்தியம்.
-
1C.திருட்டுத் தனமாகவோ, வலிமையைப் பயன்படுத்தியோ பிறர் பொருளைக் கவராது இருத்தல் அஸ்தேயம்.
-
1D. மனம், வாக்கு மற்றும் உடலால் எப்போதும் எல்லா நிலைகளிலும் தூயவனாக இருப்பது பிரம்மச்சரியம்,
-
1Eஎவ்வளவுதான் பயங்கரமாகத் துன்புற்றாலும்,பிறர் பொருளைத் தானமாக பெறாமலிருப்பது அபரிக்கிரகம். பிறரிடமிருந்து தானமாக ஒன்றைப் பெறுகின்ற ஒருவனின் உள்ளம் அசுத்தம் அடைகிறது. அவன் தாழ்ந்த நிலையை அடைகிறான். சுதந்திரத்தை இழக்கிறான். கட்டுண்டவனாகிறான், பற்றுக் கொண்டவனாகிறான்.
-
தொடரும்
-
--விவேகானந்தர் விஜயம்--



No comments:

Post a Comment