விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 61
---
ஒருநாள் சுவாமிஜி தனது அறையில் ,நாட்டின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.அப்போது அவரது சீடர் சரத்சந்திரர் அவரை காண வந்திருந்தார்.இருவர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.அவரது அறையில் கீழ் மற்ற துறவிகளும்,பிரம்மச்சாரிகளும் அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.சுவாமிஜி தனது அறை படிக்கட்டு வழியாக கீழே வந்தார்.
-
அப்போது மிகஉயர்ந்த மனநிலையில் .அங்கிருந்த துறவிகளையும் பிரம்மச்சாரிகளையும் பார்த்து சுவாமிஜி கூறினார்,“இதோ பிரத்தியட்சமான கடவுள்,இதோ பாருங்கள்,அவரை ஒதுக்கிவிட்டு மற்ற விசயங்களில் மனத்தை செலுத்துவதா? இதோ அவர் தெளிவாக தெரிகிறார்,நீங்கள் பார்க்கவில்லையா? இதோ...இதோ..
--.
இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் ஓவியத்தில் எழுதிய உருவங்கள்போல் அசையாமல் நின்றார்கள்.திடீரென தாங்கள் தியானத்தின் ஆழத்திற்குள் இழுக்கப்படுவதை உணர்ந்தார்கள்.அவர்களால் பேச இயலவில்லை. 15 நிமிடங்கள் அனைவரும் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்கள். சுவாமிஜி அங்கிருந்து அகன்றார்,அதன் பிறகே மற்றவர்கள் சாதாரண நிலைக்கு திரும்பினார்கள்...(தியானநிலையில் ஒவ்வொருவருக்கும் என்னவிதமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன என்று தெரியவில்லை)
-
ஒரு நாள் மேலை நாட்டு மாணவி ஒருத்தி,சுவாமிஜியிடம், நான் மட்டும் சிறிது காலத்திற்கு முன்பு வாழ்ந்திருந்தால் ஸ்ரீராமகிருஷ்ணரை தரிசித்திருப்பேன் என்றாள்.
அதற்கு சுவாமிஜி”ஏன் என்னை பார்க்கிறாயே! என்று கூறினார்.(ஸ்ரீராமகிருஷ்ணரை இயக்கிய இறைவன்தான் சுவாமிஜியையும் இயக்கிக்கொண்டிருந்தார்)
-
மிசஸ் ஹேன்ஸ்ப்ரோ ஒருமுறை சுவாமிஜியிடம்.உங்கள் பணியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.சுவாமிஜி அமைதியாக கூறினார்,நான் இறந்து பத்தே வருடங்களில் என்னை தெய்வமாக வழிபடுவார்கள்.
-
1901 டிசம்பர் 28 முதல் 31 வரை கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் வருடாந்தரக் கூட்டம் நடைபெற்றது. சுவாமிஜி அரசியல் மற்றும் அது சார்ந்த இயக்கங்களிலிருந்து விலகியே இருந்தார். எங்கள் நாட்டை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று பிச்சைகேட்கும் பாணியில் அமைந்த காங்கிரஸ்சின் கொள்கைகளை அவர் சற்றும் விரும்பவில்லை.
-
சுவாமிஜி தன்னுடைய சீடரிடம் இது குறித்து பேசும் போது,
இந்த கோரமான பஞ்சம்,வெள்ளம்,வியாதிகள்,தொற்றுநோய் பரவி வரும் இந்த வேளையில் அவர்கள் எங்கே போய்விட்டார்கள்? ஏழைகளுக்கு யாராவது உதவி செய்தார்களா?சொல் .”அரசை கையில் வெறுமனே தந்துவிடுங்கள் என்று சொல்வதால் அனைத்தும் நடந்துவிடுமா? உன்னைப்போன்ற இரண்டாயிரம்பேர் மாவட்டம் தோறும் நோயிலும் வறுமையிலும் துன்பப்படும் ஏழைகளுக்காக வேலை செய்தால் ,அரசியல் விவகாரங்களில் உங்களை கலந்தாலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இருப்பார்களா?
-
சுவாமிஜியின் போக்கை காங்கிரஸ்காரர்கள் விரும்பவில்லை.அதே வேளையில் திலகர் போன்ற சிலர் அவரது கருத்துக்களை ஆதரித்தார்கள்.
-
1901 காங்கிரஸ் மாநாடு முடிந்த பிறகு காந்தியடிகள் சுவாமிஜியை சந்திக்க விரும்பினார்.ஆனால் காந்திஜி மடத்திற்கு சென்றபோது சுவாமிஜி அங்கு இல்லை.அதன் பிறகு கடைசிவரை காந்தியடிகள் சுவாமிஜியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை
---
...தொடரும்...
--
----விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment