Monday 19 December 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 63

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 63
---
உணவுக் கட்டுப்பாடு, தூக்கமின்மை, சிகிச்சைக் கட்டுப்பாடுகள் என்று அனைத்திற்கும் உட்பட்டிருந்தும் சுவாமிஜி அனைத்தையும் கடந்தவராகவே இருந்தார். இவை எதுவும் அவரை பாதிக்கவில்லை.அவரிடமிருந்த ஆன்மீக ஒளி சற்றும் குறையவில்லை. இந்த நாட்களில் சுவாமிஜி ஆங்கில கலைக்களஞ்சியத்தின் ( Encyclopaedia Britannica) புதிய பதிப்பை படிக்க ஆரம்பித்திருந்தார்.
-
ஒரு நாள் அவரது அறையில் அந்த பெரிய தொகுதிகளைக்கண்ட சரத்சந்திரர்,“அப்பப்பா!இத்தனையையும் படிக்க ஓர் ஆயுட்காலம் போதாது என்றார். ஆனால் இதற்குள் சுவாமிஜி 10 தொகுதிகளை படித்துமுடித்திருந்தார் என்பது சரத்திற்கு தெரியாது.
சரத்தின் வியப்பை கண்ட சுவாமிஜி,“நீ என்ன சொல்கிறாயா? நான் ஏற்கனவே 10 தொகுதிகள் படித்துவிட்டேன்.உனக்கு சந்தேகம் இருந்தால் அவைகளிலிருந்து கேள்விகள் கேள் என்றார்.சரத்தும் பல புத்தகங்களிலிருந்து பல கேள்விகள் கேட்டார்,சுவாமிஜி உடனுக்குடன் பதில் சொல்லியது மட்டுமல்ல,அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட அதே வாக்கியங்களை அப்படியே கூறினார்.“ஓ இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது” என்றார் சரத்.
இதில் வியப்படைய ஒன்றும் இல்லை,மனித சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. முற்றிலும் பிரம்மச்சர்ய விரதம் காப்பவனால் அதைத்தையும் அப்படியே மனப்பாடம் செய்ய முடியும்.ஒருமுறை கேட்டதையும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளமுடியும் என்றார் சுவாமிஜி
-
உடல் நிலை மிக மோசமான போதும் சீடர்களுக்கு பயிற்சியளிப்தை சுவாமிஜி நிறுத்தவில்லை.சற்று ஓய்வு எடுக்குமாறு மற்றவர்கள் கூறியபோது சுவாமிஜி சொன்னார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் மகாசமாதி அடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு,அவர் யாரைக் ”காளி” என்று அழைத்தாரோ அவள் என் உடம்பினுள் புகுந்தாள்.நான் ஓய்வெடுக்க அவள் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அவள் என்னைவிட்டு விலகியது போல தோன்றுகிறது.அந்த பெண்ணை(காளி) இப்போது காண முடியவில்லை.அவள் என் கையைப்பிடித்திருந்ததை விட்டுவிட்டாள்.
-
சுவாமிஜியின் உடம்பின் மூலம் என்னென்ன பணிகள் நிறைவேறவேண்டியிருந்ததோ அவைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை சுவாமிஜி உணர்ந்தார்.
-
ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் அவரது பெண்சீடரான மெக்லவுடிடம் சுறினார்..இந்த உலகத்தில் எனக்கென்று எதுவும் இல்லை.ஒரு தம்பிடி காசுகூட என்னிடம் இல்லை. எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்தையும் மடத்தில் கொடுத்துவிட்டேன்.(சுவாமிஜி அந்த நாட்களில் மடத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை)
-
மெக்லவுட்..சுவாமிஜி,உங்கள் ஆயுள் முழுவதும் செலவுக்கு மாதம் 50 டாலர் தருகிறேன்.
-
சுவாமிஜி(சிரித்துவிட்டு).அதைவைத்து நான் வாழமுடியுமா?
-
மெக்லவுட்..முடியும்.கட்டாயமாக முடியும்..ஆனால் ஜஸ்கிரீம் சாப்பிடக்கூடாது.
-
சுவாமிஜி புன்னகைத்தார்..சுவாமிஜியிடம் 200 டாலர் கொடுத்தார் மெக்லவுட்.
-
ஒரு நாள் மடத்தில் நடந்த விளையாட்டு போட்டிகளுக்கு சகோதரி நிவேதிதா 
பரிசளித்துக்கொண்டிருந்தார்.சுவாமிஜி ஜன்னல் வழியாக அதை பார்த்துகொண்டிருந்தார். 
-
அப்போது மெக்லவுட்டிடம் சுவாமிஜி கூறினார், நான் என் 40 வது வயதை பார்க்க மாட்டேன்.
-
மெக்லவுட்..ஏன் சுவாமிஜி,புத்தர் தனது 40 வது வயதில் தானே மாபெரும் பணியை ஆரம்பித்தார் 80 வயதுவரை அவர் வாழ்ந்தாரே!
-
சுவாமிஜி..ஆனால் நான் சொல்லவேண்டிய செய்தியை சொல்லிவிட்டேன்.இனி நான் போகவேண்டியது தான்.
-
மெக்லவுட்..ஏன்போகவேண்டும் சுவாமிஜி?
-
சுவாமிஜி..பெரிய மரத்தின் நிழலில் சிறிய மரங்கள் வளராது. சிறிய மரங்கள் வளர்வதற்கு நான் வழிவிடவேண்டும்.
-
சுவாமிஜி இவ்வாறு கூறியபோதும் மெக்லவுட் இதை எந்த கோணத்தில் புரிந்துகொண்டர் என்று தெரியவில்லை. சுவாமிஜியுடன் வாழ்ந்த அனைவரும் அவரது நோய் விரைவில் குணமடைந்துவிடும் என்றும் மீண்டும்,சுவாமிஜி இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆன்மீக கருத்துக்களை பரப்புவார் என்றே எதிர்பார்த்தார்கள்....
-
--தொடரும்---
-
---விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment