Monday, 12 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-4

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-4
-
கேள்வி..இந்தியாவில் பல சர்ச்சுகளை கட்டுகிறார்கள்.கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள்.இந்தியாவில் ஏற்கனவே மதம் இருக்கிறதே! வெளிநாட்டில் உள்ள மதம் தேவையா?
-
சுவாமிஜி..இந்தியாவில் அஞ்ஞானிகளின் ஆன்மாக்களை காப்பாற்றுவதற்காக,மதப்பிரச்சாரகர்களை அனுப்பும் அமெரிக்க கிறிஸ்தவர்களான நீங்கள் இந்தியர்களின் உடல்களை பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை( அந்த காலத்தில் லட்சக்கணக்கானோர் பட்டினியால் இறந்தார்கள்) இந்தியா முழுவதும் சர்ச்சுகளைக்கட்டுகிறீர்கள். இந்தியாவிற்கு உங்கள் மதம் தேவையில்லை. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது.
இந்தியாவில் பணத்திற்காக மதப்பிச்சாரம் செய்பவர்களை காறித்துப்புவார்கள்.
-
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 1.பக்கம்53

No comments:

Post a Comment