ஒரு பெண் சிங்கத்தைப் பற்றிய கதை உண்டு. அது கருவுற்ற ஒரு சிங்கம். அது ஒருசமயம் இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஓர் ஆட்டு மந்தையைப் பார்த்தது. உடனே அதன்மேல் பாய்ந்தது. அந்த முயற்சியில் அது இறந்துவிட்டது. இறப்பதற்கு முன் அது ஒரு குட்டியை ஈன்றது.
தாயற்ற அந்தச் சிங்கக்குட்டியை ஆடுகள் வளர்த்தன. அந்தச் சிங்கக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்தது. புல்லைத் தின்றது, ஆடுகளைப் போலவே கத்தியது. காலப்போக்கில் அந்தச் சிங்கக்குட்டி நன்கு வளர்ந்து ஒரு பெரி சிங்கமாக மாறியது. ஆனால் அது தன்னை ஓர் ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது.
ஒருநாள் வேறொரு சிங்கம் இரை தேடிக்கொண்டு அங்கு வந்தது. அங்கே ஆடுகளுக்கு நடுவில் ஒரு சிங்கம் இருப்பதையும், அது ஆபத்துச் சமயத்தில் ஆடுகளைப் போலவே பயந்து ஓடுவதையும் கண்டு வியப்படைந்தது. அது அந்த ஆட்டுச் சிங்கத்தை நெருங்கி, நீ ஆடல்ல. சிங்கம் என்று சொல்ல முயன்றது. புதிய சிங்கம் தன்னை நெருங்கும்போதே ஆட்டுச் சிங்கம் பயந்து ஓடியது. ஆகவே புதுச் சிங்கம் ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
ஒருநாள் ஆட்டுச் சிங்கம் தூங்கிக் கொண்டிருப்பதைப் புதிய சிங்கம் பார்த்தது. உடனே அதை நெருங்கி, நீ ஒரு சிங்கம் என்று கூறியது. அஞ்சி நடுங்கிய அந்த ஆட்டுச் சிங்கம், புதிய சிங்கம் சொல்வதை நம்பாமல் நான் ஆடுதான். என்று சொல்லிக்கொண்டே ஆட் டைப்போல் கத்தியது. புதிய சிங்கம் ஆட்டுச் சிங்கத்தை ஓர் ஏரிக்கு இழுத்துச் சென்றது. பின்னர் அது ஆட்டுச் சிங்கத்தைப் பார்த்து, தண்ணீரில் பார், நம் இருவருடைய உருவங்களின் பிரதிபலிப்பும் தெரிகிறது என்று கூறியது. ஆட்டுச் சிங்கம் ஏரி நீரில் தென்பட்ட இரண்டு பிரதி பிம்பங்களையும் ஒத்துப் பார்த்தது. பின்னர் புதுச் சிங்கத்தையும் தன்னுடைய பிம்பத்தையும் பார்த்தது. அடுத்த கணமே தான் ஒரு சிங்கம் என்ற எண்ணம் அதற்கு வந்துவிட்டது. உடனே அது கர்ஜித்தது. ஆடுபோல் கத்துவது மறைந்துவிட்டது.
நீங்கள் சிங்கங்கள்; தூய்மையான எல்லையற்ற, முழுமையான ஆன்மாக்கள் பிரபஞ்சத்தின் சக்தி முழுவதும் உங்களுக்குள் இருக்கிறது.
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்208
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்208
No comments:
Post a Comment