Sunday, 4 December 2016

ஹிந்து

ஹிந்து
-----
🌿நமது மக்களையும் நமது மதத்தையும் குறிப்பதற்கு சாதாரணமாக ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது - இந்து.
----
🌿நான் வேதாந்தம் என்று எதைக் கூறுகிறேனோ அதைப் புரிந்துகொள்வதற்கு, இந்து என்ற சொல்லைச் சற்று விளக்க வேண்டியுள்ளது
----
🌿பழங்கால பாரசீகர்கள் ஸிந்து நதியை #ஹிந்து நதி என்று அழைத்தார்கள். சம்ஸ்கிருதத்தின் ஸ என்ற சப்தம் பழங்கால பாரசீகத்தில் ஹ என்று மாறிற்று. எனவே ஸிந்து ஹிந்து வாயிற்று. கிரோக்கர்களுக்கு ஹ வை உச்சரிப்பது கஷ்டமாயிருந்தது. ஆதலால் ஹ வையும்அவர்கள் விட்டுவிட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எனவே இந்தியர்களானோம். சிந்து நதிக்கு மறுகரையில் வாழ்பவர்கள் ஹிந்து என்று அழைக்கப்பட்டனர்.
----
🌿பழங்காலத்தில் அந்த வார்த்தையின் பொருள் எதுவாகவும் இருந்திருக்கலாம் ஆனால் இன்று அது தன் எல்லா வேகத்தையும் இழந்துவிட்டது. எனெனில் சிந்துநதிக்கு இக்கரையில் இன்று வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; இந்துக்கள் உள்ளனர், அவர்களைத் தவிர முகம்மதியர்கள்,பார்சிகள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் சமணர்கள் முதலியவர்களும் வசிக்கினறனர். எனவே ஹிந்து என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால் அது இவர்கள் அனைவரையும் குறிக்க வேண்டும், மதக்கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அனைவரையும் ஹிந்து என்று சொல்ல முடியாது. எனவே நமது மதத்திற்கு ஒரு பொதுப் பெயர் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
----
🌿பல்வேறு நெறிகள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு சடங்குகள் ,பல்வேறு வழிபாட்டு முறைகள் இவற்றின் ஒரு தொகுப்புபோல் உள்ளது நமது மதம். ஒரு தனித் தலைமை இல்லை ஒரு தனி பெயரில்லை, ஒரு தனி அமைப்பு எதுவும் இல்லை . நமது மதப் பிரிவுகள் எல்லாம் ஒப்புக் கொள்ளும் விஷயம் ஒரு வேளை இது ஒன்றுதான் சாஸ்திரங்களாகிய வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்..
----
சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment